புஷ்பா- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் செம்மரம் என்ற வார்த்தையே வலி நிறைந்த வார்த்தை. செம்மரம் கடத்தியவர்களாக குற்றம் சாட்டப்பட்டு கொலையுண்ட உயிர்களில் தமிழ் உயிர்கள் அதிகம். அதனால் செம்மரக்கடத்தல் பற்றிய படம் என்றதும் புஷ்பா படம் மீது ஓர் பதட்டம் நிறைந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் புஷ்பா அப்பாவிகள் பற்றிய கதை அல்ல..அடப்பாவிகள் பற்றிய கதை

ஹீரோ அல்லு அர்ஜுன் செம்மரக்கடத்தலில் ஈடுபடுகிறார். அதற்கு முன் கடத்தல் செய்தவர்களை விட அதிவேகமாக முன்னேறுகிறார். அவரை சுற்றி நிறைய பகைகள் மூள்கிறது. Learn more on the subject of mr bet app. அதையெல்லாம் வென்ற அல்லு அர்ஜுனுக்கு ஒரு உயர் காவல் அதிகாரி செக் வைக்கிறார். இருவரும் மோதத்துவங்க… அடுத்து என்ன? என்பதோடு முதல் பாகம் முடிகிறது.

அல்லு அர்ஜுன் பேசும் சென்னைத்தமிழ் அவர் நன்றாக நடித்தாலும் நம்மை எரிச்சல் படவைக்கிறது. பாடல்களிலும் சண்டைக்காட்சிகளிலும் வழமை போல அருமை செய்கிறார். பகத்பாசில் என்ட்ரி ஆகும் காட்சியிலே மிரட்டியிருக்கிறார். பெரும் பெரும் ஆந்திர வில்லன் அணிகள் எல்லாருமே நல்ல தேர்வு. ராஷ்மிகா கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். ஊ சொல்றீயா மாமா பாடலில் சமந்தா குத்தாட்டம் மாஸ்

படத்தில் இன்னொரு ஹீரோ தேவிஸ்ரீ பிரசாத் தான். மிரட்டி எடுத்திருக்கிறார். பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே அல்டி. ஒளிப்பதிவும் புஷ்பாவை பயராக காட்டுகிறது.

படத்தின் பெரும் குறை கதாப்பாத்திர வார்ப்பு தான். என்னதான் ஹீரோவின் மாஸை ரசித்தாலும் அவரும் சமூகவிரோதச் செயல்தான் செய்கிறார் என்பதால் அவர் மீது பெரிய அபிப்பிராயம் வரவில்லை. பகத்பாசில் வந்து அல்லு அர்ஜுனை சிதறவிடும் போது ஆடியன்ஸுக்கு சந்தோசம் தான் வருகிறது. ஆக ஹீரோயிசம் பகத்பாசில் கேரக்டருக்குத் தான் பொருந்துகிறது. நல்ல விஷுவல்ஸ் இருந்தாலும் மூன்று நேரம் என்பது ரொம்ப அதிகம் பாஸ். திரைக்கதையிலும் கேரக்டர் ஸ்கெட்சிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் செம்மரம் கடத்தும் புஷ்பா நம் மனதையும் கடத்தியிருப்பான்

2.75/5