இண்டர்நேஷனல் லெவலில் ‘தல 57’ : டபுள் மடங்காக தெறிக்க விடும் அனிருத்!
‘வேதாளம்’ படத்துக்குப் பிறகு அஜித்தின் படம் இதுவரை ஒன்று கூட ரிலீசாகவில்லை.
என்றாலும் அடுத்த படமான ‘தல 57’ படத்தின் பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால் இந்தப்படம் எப்போது ரிலீசாகும் என்பது தான் தல ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதனால் அவ்வப்போது வெளியாகும் அந்தப்படம் பற்றிய தகவல்களும், புகைப்படங்களும், வீடியோக்களும் அஜித் ரசிகர்களை தொடர்ந்து உற்சாக மனநிலையில் வைத்துக் கொண்டிருக்கிறது.
அவர்களை இன்னும் உற்சாகப்படுத்தும் விதமாக தல 57 படத்தின் பாடல்களைப் பற்றிய சீக்ரெட்டை பகிர்ந்திருக்கிறார் அனிருத்.
சிங்கப்பூரில் லைவ் ஷோ நடத்திக் கொண்டிருக்கும் அனிருத்திடம் அங்கு குழுமியிருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் தல 57 படத்தின் பாடல்கள் எப்படியிருக்கும் என்று ஆவலாக கேள்வியெழுப்பினார்.
அதற்கு அனிருத்தோடு மேடையில் நின்று கொண்டிருந்த ஹிப் ஹாப் பாடகர் யோகி பி படத்தின் ஒரு பாடலை ஹம்மிங் செய்து காட்டவும், கைதட்டல்களும், விசில் சத்தங்களும் அரங்கத்தை அதிர வைத்தன.
அதோடு பாடல்கள் எல்லாமே இண்டர்நேஷனல் தரத்தில் இருக்கும் என்கிற தகவலை சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் அனிருத்.
அப்போ டபுள் மடங்கா தெறிக்கும்னு சொல்லுங்க!