இதுதான் ‘தல 57’ படத்தின் டைட்டிலா? : சும்மா அதிருதுல்ல…!!!

Get real time updates directly on you device, subscribe now.

ajith1

மீபகால அஜித் படங்கள் என்றாலே டைட்டிலில் ஆரம்பித்து எல்லா விஷயங்களும் வைரலாகி விடுகிறது.

அந்தளவுக்கு அவருடைய ரசிகர்கள் இருக்கிற வேலை வெட்டிகளை எல்லாம் விட்டுவிட்டு சமூகவலைத்தளங்களே கதியென்று கிடக்கிறார்கள்.

அதை சரியாகப் பயன்படுத்தி வரும் அஜித்தும், அவரை வைத்து இயக்கும் இயக்குநர்களும் படத்தின் டைட்டில் விஷயத்தைக் கூட ரகசியமாக வைத்து ரிலீஸ் நேரத்தில் தான் அதை வெளியிடுகிறார்கள்.

‘வேதாளம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடித்து வரும் 57 வதுபடத்தையும் சிவா தான் இயக்கி வருகிறார்.

Related Posts
1 of 54

வழக்கம் போல இன்னும் டைட்டில் வைக்கப்படாமல் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தின் டைட்டில் பற்றிய ரகசியம் இப்போதே கசிந்திருக்கிறது.

ஆமாம், இந்தப் படத்துக்கு மகாபாரத கதாபாத்திரமான ‘துருவன்’ என்ற பெயரை படத்துக்கு டைட்டிலாக வைக்கலாமா என்று யோசித்து வருகிறாராம் இயக்குநர் சிறுத்தை சிவா.

டைட்டில் குறித்து அஜித் மற்றும் தயாரிப்பாளருடன் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அதுவரை படத்துக்கு ‘ஏ.கே 57’ என்பது தான் டைட்டில்!