நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா – 2 தாண்டவம்’!

Get real time updates directly on you device, subscribe now.

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக் பஸ்டர் ஹிட் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு ஆகியோரின் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படத்திற்கு, #BB4 அகண்டா 2 தாண்டவம் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது அவர்களின் பரபரப்பான பிளாக்பஸ்டர் அகண்டா திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகிறது. ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் படத்தைத் தயாரிக்கின்றனர், அதே நேரத்தில் எம் தேஜஸ்வினி நந்தமுரி இந்த பான் இந்தியா திரைப்படத்தை வழங்குகிறார்.

படக்குழு மற்றும் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் அகண்டா 2 இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது. முஹூர்த்தம் ஷாட்டுக்கு, தேஜஸ்வினி கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய, பிராமணி கிளாப்போர்டு அடித்தார். முஹூர்த்தம் ஷாட்டுக்கு பாலகிருஷ்ணா ஒரு பவர்ஃபுல் டயலாக்கைச் சொன்னார்.அகண்டாவில் கதாநாயகியாக நடித்த பிரக்யா ஜெய்ஸ்வால் இப்படத்திலும் பங்கேற்கிறார். மேலும் அவர் பிரமாண்ட துவக்க விழாவிலும் கலந்து கொண்டார்.

நந்தமுரி ராமகிருஷ்ணா அகண்டா 2 டைட்டில் தீமை வெளியிட்டார், இது கதையில் பிணைக்கப்பட்ட ஆன்மீக கூறுகளை வெளிப்படுத்தும் அதே நேரம், எஸ் தமனின் அற்புதமான ஸ்கோர் உண்மையிலேயே தனித்து நிற்கிறது, இந்த தீம் படத்தின் பிரம்மாண்டத்தை எடுத்துக்காட்டுகிறது.