சார்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

வெறும் ஆர்வத்தால் உந்தப்பட்டு, சமூக நீதி பேசியுள்ள மற்றொரு படம் இந்த சார்

1980-காலகட்டத்தில் நடிகர் விமல் தன் சொந்த ஊரின் அரசுப்பள்ளிக்கு ஆசிரியராக வருகிறார். தந்தை சரவணன் வர வைக்கிறார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. விமல் உள்ளூரில் அந்த அரசுப்பள்ளியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த நினைக்கிறார். அதற்கு பலரும் தடை போடுகிறார்கள். தடை போடுகிறவர்களின் நோக்கம் மூட நம்பிக்கையாகவும், சாதிய ஒடுக்குமுறையாகவும் இருப்பதால் விமல் அவர்களின் தடைகளைத் தகர்க்கிறார். முடிவில் எல்லாம் சுபம் என்பதாக படம் முடிகிறது

விமல் நன்றாகவே நடித்திருந்தாலும் அவரது கேரக்டர் அழுத்தமாக எழுதப்படவில்லை. நாயகி கேரக்டரும் அப்படியே வீணாக்கப்பட்டுள்ளது. சரவணன் நல்ல நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார். முக்கிய கேரக்டரில் தயாரிப்பாளர் சிராஜ் நடித்துள்ளார். மேலும் ஒருசில கேரக்டர்கள் படத்தில் கவனம் ஈர்க்கிறார்கள்

பின்னணி இசை எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. பாடல்களும் பெரிதாக சோபிக்கவில்லை. ஒளிப்பதிவாளர் தனக்கு கிடைத்த வசதியை வைத்து சிறப்பாக படமெடுத்துக் கொடுத்துள்ளார்.

‘கல்வி தான் ஆகப்பெரும் நம்பிக்கை, அதிபெரிய அதிகாரம்’ என்ற நல்ல கருத்தைப் பேசியுள்ள படம், திரைக்கதையிலும், படமாக்கத்திலும் ரொம்பவே சொதப்பியுள்ளது.. காட்சிகளுக்கான கோர்வை ரொம்பவே மிஸ்ஸிங். படம் எந்த இடத்திலும் நம்மோடு கனெக்ட் ஆகவே இல்லை. அசாதரணமாக வந்திருக்க வேண்டிய சார், சாதாரணமாக வந்து போகிறார்.

எடுத்துக்கொண்ட கதைக்காக மட்டும் பாராட்டலாம்
2.75/5