ரஜினியின் ‘காலா’ டப்பிங் – சென்னை நாக் ஸ்டூடியோவில் தொடங்கியது

Get real time updates directly on you device, subscribe now.

‘கபாலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

வுண்டர்பேர் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் இந்த படம், கபாலி திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியும் – இயக்குனர் பா.ரஞ்சித்தும் இணையும் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts
1 of 65

இப்படத்தின் சூட்டிங் முற்று பெற்ற நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டப்பிங் இன்று சென்னையில் உள்ள ‘நாக்’ ஸ்டூடியோவில் தொடங்கியது. படக்குழுவினருக்கு நிர்வாகி கல்யாணம் பொன்னாடை போர்த்தி வரவேற்று கெளரவித்தார்.

இன்று நடைபெற்ற பூஜையில் படக்குழுவினருடன் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். ‘காலா’ திரைப்படம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.