ரொம்பத் திமிர் பிடிச்சப் பொண்ணு! : அக்‌ஷரா மீது ஏன் பாலிவுட்டுக்கு இம்பூட்டு கோபம்?

Get real time updates directly on you device, subscribe now.

akshara1

க்கா ஸ்ருதிஹாசன் வழியில் பாலிவுட் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அக்‌ஷரா.

குறிப்பாக பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி அந்தாலும் இன்னும் அவர் அங்கு பெரிய அளவில் பிரபலமாகவில்லை. ஆனால் அதற்குள் ‘திமிர் பிடித்தப் பெண்’ என்கிற பட்டத்தை வாங்கியிருக்கிறார் அக்‌ஷரா.

அப்படி என்ன தான் நடந்தது?

‘லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா’ என்ற ஹிந்திப்படம் அக்‌ஷரா நடிப்பில் வரும் ஏப்ரல் 7 ம் தேதி ரிலீஸ் ஆக போகிறது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்த அக்‌ஷரா வந்த கொஞ்ச நேரத்திலேயே வீடு திரும்பி விடலாம் என்று நினைத்துக் கொண்டு வந்திருக்கிறார். நிகழ்ச்சியோ 5 மணி நேரத்தையும் தாண்டி நடந்து கொண்டிருக்கவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கடிந்து கொண்டு எஸ்கேப் ஆக முயற்சித்திருக்கிறார்.

ஆனால் அந்த நிகழ்ச்சி முடியவும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் கலந்து கொண்டு விட்டுச் செல்லுங்கள் என்று சொல்லவும் அவர்களிடம் சண்டைக்குப் போய் விட்டார். கூடவே இருந்து பேட்டி கேட்ட ஒரு பத்திரிகையாளரையும் கடுமையாக திட்டியிருக்கிறார்.

இவ்வளவு நடந்தும் புரமோஷனுக்கு முடிந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து விட்டுத்தான் போனாராம் அக்‌ஷரா.

ஆனாலும் நேத்து வந்த பொண்ணு, இம்பூட்டு திமிரா நடந்துக்குதே என்பது தான் அக்‌ஷரா மீது பாலிவுட் ஆவேசத்தோடு வைக்கும் குற்றச்சாட்டு.

உலக நாயகன் பொண்ணாச்சே..? இந்தளவுக்குக் கூட இல்லேன்னா எப்படி?