கருத்துக்களைப் பதிவுசெய் விழாவில் கே.பாக்கியராஜ் கோரிக்கை
சமூகவலைத் தளங்களால் பெண்கள் பாதிக்கப்படுவதைப் பற்றியபடம் கருத்துக்களைப் பதிவுசெய். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் கே.பாக்கியராஜ் பேசியதாவது,
“என்னுடைய வெற்றிக்கு காரணம் என் கருத்துக்களை சினிமாவில் பயமில்லாமல் பதிவு செய்ததால் தான். என் இயக்குநரிடம் இந்தக்காட்சி நல்லால்லை என்று ஓப்பனாக சொல்லிடுவேன். அவர் கோபப்பட்டாலும் கவலைப்பட மாட்டேன். அதுபோல் இந்தப்படத்தில் குறிப்பாக இந்த விழாவில் பெண்களை கெளரவித்தார்கள். அது சந்தோஷமாக இருந்தது. மேலும் இந்த விழாவிற்கு காங்கிரஸ் எம்.எல். ஏ விஜயதரணி வந்திருக்கிறார். அவர் எதாவது கோரிக்கை இருந்தால் சொல்லுங்கள் என்றார். ஒரே கோரிக்கை தான்.
எல்லா தியேட்டர்களிலும் பெரிய படங்கள் போலவே சின்னப்படங்களும் ஓட வேண்டும். அதற்கு அரசாங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் படம் நல்லாருந்தால் நிச்சயமாக பாராட்டிவிடுவார்கள். இந்தப்பட டீம் சின்சியராக உழைத்திருக்கிறார்கள். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.
ஒரு பெண்ணுக்கு தந்தை பாதுகாப்பிற்காக தான் போன் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதைத் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதை இந்தப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் விழிப்புணர்வு தேவை. இப்போது சினிமாவிற்கே விழிப்புணர்வு தேவைப் படுகிறது.” என்றார்