கண் தான விழிப்புணர்வுக்காக தொண்டு நிறுவனம் தொடங்கிய அமலாபால்!

Get real time updates directly on you device, subscribe now.

பிரபல முன்னணி நடிகையான அமலாபால் ‘அமலா ஹோம்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியை திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது.

இது குறித்து நடிகை அமலாபால் பேசுகையில், ”அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடை பேச்சுக்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுதுதான் சில முக்கியமான புள்ளி விவரங்களை நான் கவனித்தேன்.

Related Posts
1 of 13

உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் இதில் 70 சதவிகிதம் Cornes Transplant மற்றும் Cataract போன்ற அறுவை சிகிச்சைகளால் குணப்படுத்தப்படக்கூடியவை.

இதற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கியமான விஷயம் போதிய கண் தானம் இல்லாதது தான். தற்பொழுதுள்ள நிலையில் வருடத்திற்கு வெறும் 40000 கண் சிகிச்சைகள் மட்டுமே பண்ணக்கூடிய அளவில் கண் தானம் நடக்கின்றது.

நான் எனது கண்களை தானம் செய்வது மட்டுமில்லாமல் இந்த கண்தான பற்றாக்குறையை நீக்க, இந்த அறுவை சிகிச்சைகளுக்கு நிதி திரட்ட ‘அமலா ஹோம்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அனைவருக்கும் கண் பார்வை கிடைக்கும் படி செய்து நமது அழகான, மிக வேகமாக வளர்ந்து வரும் நமது தேசத்தை அவர்களையும் காண வைக்கலாம் ” என்றார் அமலாபால்.