பவர் ஸ்டார், யோகிபாபு, கஞ்சாகருப்பு கூட்டணியில் ‘நான் யார் தெரியுமா’

Get real time updates directly on you device, subscribe now.

naan-yaar

வர் ஸ்டார் சீனிவாசன், யோகிபாபு, கஞ்சாகருப்பு மூவருடன் முக்கிய வேடத்தில் சங்கவி நடிக்கும் படத்திற்கு “நான் யார் தெரியுமா” என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும் இதில் ரோஷன், சேஷு, அர்ஷிதா, மெர்க்குரி சத்யா, கே.பி.சங்கர், ஜீவிதா, சினேகாராஜன், கே.பி.செந்தில் குமார், போண்டா மணி, திருலோக், வி.ராஜா ஆர்.ஸ்டாலின், கிங்காங், ரமணா தேவி, எம்.ஆர்.ஜி.ராஜேஷ்வரி, மயிலை தேவி, வீரமணி, காதர் உசைன், ஆகியோரும் நடிக்கிறார்கள்

Related Posts
1 of 9

சொற்கோ பாடல் எழுத ரஷாந்த் இசைமீட்ட சந்திரன் சாமி ஒளியூட்ட கிளாமர் சினிகைடு நிறுவனம் தயாரிக்கிறது.

காவல் துறை அதிகாரிகளாக வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வரும் மூவர் வாழ்விலும் ஒரு பெண் பேய் குறுக்கிடுகிறது. அந்த பேய் இவர்களை போலீஸ் அதிகாரிகளாக்க மூன்று நிபந்தனைகளை போடுகிறது. நிபந்தனைகளை சவாலாக ஏற்றுக்கொண்டு போராடும் அவர்களின் அவஸ்தைகளை நகைச்சுவையுடன் சொல்லும் படம் தான் “நான் யார் தெரியுமா” என்கிறார் இதில் இயக்குனராக அறிமுகமாகும் நவீன்ராஜ்.