நண்பர்கள் காதலர்கள் ஆக முடியுமா? அப்படி ஆனார்களா? என்ற லைன் தான் இந்த 2கே லவ் ஸ்டோரி
ஹீரோ ஜெகவீர் ஹீரோயின் மீனாட்சி இருவரும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள். அவர்கள் நட்பிற்குள் காதல் துளிர்க்கிறதா? இல்லையா? என்பதே கதை. “இதை ஒரு வசந்த கதைன்னு நம்புனா இது புது வசந்த கதையால்ல இருக்கு?” யெஸ் புது வசந்தம் முதல் பிரியாத வரம் வேண்டும் வரை உள்ள பல படங்களின் காபி பேஸ்ட் தான் இந்தப் படத்தின் கதை
கதையின் கதாநாயகனான ஜெகவீர் கூடுமானவரை தன் 2K கிட் வேடத்தைத் தடுமாறாமல் தாங்கியுள்ளார். சில காட்சிகளில் மட்டும் திணறல் இருந்தாலும் சமாளித்துள்ளார். மீனாட்சி தனக்கு கொடுத்த கேரக்டருக்கு நியாயம் சேர்க்க முயற்சித்துள்ளார். பால சரவணன் ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்து ஆறுதல் படுத்துகிறார். சிங்கம் புலி காமெடி நன்றாக வொர்க் ஆகியுள்ளது
இசை இமான். அவரை மீண்டும் கமான் என்று அழைக்கும் அளவில் தான் அவரது ஸ்கோர் இருக்கிறது. ஒளிப்பதிவில் சில வறட்சிகள் தெரிந்தாலும், பெரிய தவறுகள் ஏதுமில்லை
ரைட்டராகவே சுசீந்திரன் பழைய கதை திரைக்கதை வசனத்தை எழுதியுள்ளார். சில யூகிக்க முடியாத காட்சிகள் இருந்தாலும் இன்னும் ரசிகனுக்கு டப் கொடுத்திருக்க வேண்டும். லாஜிக்கும் துருத்துகிறது. படத்தில் 2கே மேஜிக்கும் நடக்கவில்லை. அதனால் 2கேவிற்கு ஒகே கூட சொல்ல முடியவில்லை
2.5/5