சொந்த வீடு கனவைச் சொல்லும் மெலோ ட்ராமா படம்
தான் ஏற்றிவிட்டத் தங்கையே தன்னை “வீடு வாங்க லாயிக்கில்லை” என்று சொன்னதால் ஏற்பட்ட வலியை மூலதனமாக கொண்டு ஒரு வீடு வாங்க வேண்டும் என்று போராடுகிறார் சரத்குமார். அந்தப் போராட்டம் மகன் சித்தார்த் மூலமாகவேணும் நிறைவேறியதா என்பது தான் 3BHK கதை.
ஒரு நடிகராக சரத்குமார் மீண்டும் முத்திரைப் பதித்துள்ள படம் இது. அப்பாவாக, அப்பாவியாக, உழைப்பாளியாக படமெங்கும் சரத்திசம். சித்தார்த் சித்தா படத்திற்குப் பின் ஸ்கோர் செய்துள்ளார். மீது ராகுநாத் கேரக்டரை சிறப்புறச் செய்துள்ளார். தேவையானிக்குப் பெரிதாக வேலையில்லை.
அமிர்த் ராம்நாத் இசையில் பாடல்கள் ஒகே. பின்னணி இசை எமோஷ்னல் காட்சிகளை கூர்மைப் படுத்துகிறது. ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜிதின் குறுகிய எல்லைகளுக்குள் நல்ல பணியைச் செய்துள்ளனர். எடிட்டர் சிவா படத்தில் 15 நிமிடத்தை வெட்டியிருக்கலாம்
முதல்பாதியில் கனெக்ட் ஆகும் எமோஷ்னல் காட்சிகள் பின்பாதியில் ஓவர் டோஸாகிவிடுகிறது. ஒரு சொந்த வீடு இருந்தால் தான் மதிப்பு மகிழ்ச்சி என்ற தோற்றத்தை படம் ஏற்படுத்துகிறது. கூறியதையே திருப்பித் திருப்பிக் கூறினால் எப்படி கடுப்படிக்குமோ, அதேபோல் கடுப்படிக்கும் சீக்வென்ஸ் சிலவற்றை இயக்குநர் ஸ்ரீகணேஷ் தவிர்த்திருக்கலாம். சிற்சில மென் உணர்வுகள் தரும் சந்தோசம் மட்டுமே படத்தைக் காப்பாற்றுகிறது
2.75/5