800- விமர்சனம்

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு அவர் எடுத்த விக்கெட்களின் எண்ணிக்கையின் பெயரில் படமாக வந்துள்ளது

இலங்கையில் மலையகத்தமிழர்களாக வாழும் குடும்பம் முரளிதரனின் குடும்பம். அங்கு அவர் குடும்பம் சந்திக்கும் இன்னல்கள் வழியே பயணிக்கும் கதை, முரளிதரனின் கிரிக்கெட் ஆசை, முயற்சி, பயிற்சி, அவமானம், அரசியல் என தொடர்ந்து அவரின் 800 விக்கெட் என்ற சாதனையோடு நிறைவுறுகிறது

படத்தின் முதலாவது பாசிட்டிவ் அம்சம் நடிகர்கள் தான். முரளிதரனாகவே வாழ்ந்துள்ளார் மதுர்மிட்டால். குறிப்பாக முரளிதரனுக்கு இயற்கையாகவே உள்ள கை வளைவை கூட தன் உடல்மொழியில் கொண்டுவந்து அசத்தியுள்ளார் மதுர்மிட்டால். மகிமா நம்பியார் கேரக்டர் முக்கியமாயினும் சிறிது நேரமே வருகிறார். பிரபாகரனாக வரும் நரேன் கம்பீரம். மேலும் படத்தில் சப்போட்டிவ் கேரக்டரில் வரும் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்

ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்தில் சிறப்பாக எடுபட்டுள்ளது. அவரது கேமரா 1945 முதல் 2012 வரைக்குமான காலகட்டத்தை சிறப்பாக பிரதிபலித்துள்ளது. இசையிலும் நல்ல நேர்த்தி கூடி வந்துள்ளது. ஷார்ப்பான எடிட்டிங்கும் படத்திற்கு பலம்

ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படமாக இருந்தாலும் அதில் ஒரு பரபர திரைக்கதையை எழுதி கவனிக்க வைத்துள்ளார் இயக்குநர் ஸ்ரீபதி. மேக்கிங்கிலும் நல்ல மெச்சூட் தன்மை இருந்தது. முரளிதரன் தமிழீழ தலைவர் பிரபாகரன் சந்திக்கும் காட்சியில் இருக்கும் ஆழமான அரசியலும் ரசிக்க வைக்கிறது. நல்ல நல்ல காட்சிகளால் இந்த 800 படம் ரசிக்கத்தக்க படமாகி இருப்பதை மறுக்கவே முடியாது
3.5/5

800 movie