அஸ்வின்ஸ்- விமர்சனம்

ஒரு வித்தியாசமான களத்தில் ஒரு பேய்படம்

யூட்யூப் சேனல் கன்டென்டுக்காக வசந்த் ரவி தலைமையிலான ஐவர் குழு ஒன்று லண்டன் செல்கிறது. லண்டனில் கடல் அருகேயுள்ள ஒரு மேன்சனில் ஒரு மர்மம் இருப்பதை அறிந்து வசந்த் ரவி டீம் அங்கே செல்கிறது. அந்த மேன்சனில் உள்ள மர்மம் என்ன? அந்த மர்மத்தில் இந்த ஐந்து பேர்களுக்கும் நிகழும் ஆபத்து என்ன? ஆபத்திலிருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதை பதபதைப்பும் சலசலப்புமாக சொல்லி முடிகிறது படம்

வசந்த் ரவி நடிப்பில் வெளிவந்த படங்களில் இந்தப்படம் ஓர் தனி முத்திரை என்று சொல்ல முடியும். ஏகமான நடிப்பை ஏராளமாக வழங்கியுள்ளார். க்ளைமாக்ஸ் சமயத்தில் வெளிப்படும் அவரது நடிப்பு அடிப்பொலி ரகம். மேலும் விமலாராமன், முரளிதரன், உதயாதீப் உள்ளிட்ட படத்தில் தோன்றும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

நடிகர்களைத் தாண்டி படத்தில் ஸ்கோர் செய்வது டெக்னிக்கல் டீம் தான். இசை அமைப்பாளர் விஜய் சித்தார்த் இந்தப்படத்தில் தனி ஆவர்த்தனமே நடத்தியுள்ளார். எந்த இடத்தில் நாம் மிரட்சியடைவோம் என நினைப்போமோ அந்த இடத்தை விட்டுவிட்டு நாம் நினைக்காத ஒரு இடத்தில் இசை நம்மை மிரட்டுகிறது. பின்னணி இசை, சவுண்ட் எபெக்ட், டப்பிங் ஆகிய மூவற்றையும் ஒருங்கே இணைத்த 5.1 மிக்ஸிங் டீமும் அசத்தியுள்ளனர். இத்தனை சவுண்ட்களை சரியான இடங்களில் வைக்க வேண்டும் என டிசைன் செய்த சவுண்ட் டிசைனர்ஸ் சச்சின்& ஹரி இருவரின் உழைப்பும் அபாரமானது. விஷுவலில் இந்தப்படம் நிகழ்த்தியிருப்பது நிச்சயமாக பெரிய சாதனை. ஒவ்வொரு ஆங்கிள்ஸும் ஆக்கர் அடித்தாற்போல் நம் கண்களில் நிற்கிறது. அந்த விசயத்தில் கேமராமேன் A.M எட்வின் சகாய்க்கு ஸ்பெசல் பாராட்டு! டெக்னிக்கலாக இந்தப் படத்தைச் சொல்ல ஒரே வார்த்தை தான் உள்ளது..
“பிரில்லியண்ட்”

கதையாகவும் திரைக்கதையாகவும் நம்மை பெரிதாக படம் ஈர்க்கவில்லை. பேய்படத்தில் நாம் பார்வையாளராக இருப்பதை விட பங்கேற்பாளராக இருப்பது தான் முக்கியம். அந்த மாயாஜாலத்தை நிகழ்த்த இயக்குநர் தவறிவிட்டார். வெறும் விஷுவல் அனுபவங்களும் இரு மூன்று இடஙகளில் பயப்படுவதும் மட்டும் போதும் என்பவர்கள் இப்படத்திற்குச் செல்லலாம்.
குறிப்பு: குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம்
2.75/5

#ASVINS #அஸ்வின்ஸ்

Actor Vasanth RaviASVINS moviedirector Tarun Teja