கணவன் மனைவிக்குள் இருக்கும் பலமுகங்களை அறிமுகம் செய்கிறது அதோ முகம்
கொடைக்கானலில் ஒரு எஸ்டேட்டில் வேலை செய்யும் கணவன் வீடியோ மூலமாக வீட்டிலுள்ள தன் மனைவியை வேவு பார்க்கிறார். அதன் விளைவுகள் என்ன? என்பதே படத்தின் அவுட்லைன்
ஹீரோ எஸ்.பி சித்தார்த் இன்னும் நல்ல பயிற்சி எடுக்கவேண்டும். எமோஷ்னல் காட்சிகளில் ரொம்பவே தடுமாறுகிறார். ஹீரோயின் சைதன்யா ப்ரதாப் நல்ல தேர்வு. மென்மை வன்மை என இரண்டு வேரியஷனிலும் நன்றாக நடித்துள்ளார். கெஸ்ட் ரோலில் வரும் அருண்பாண்டியன் சிறப்பு.
அருண் விஜயகுமார் ஒளிப்பதிவில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். நல்ல லொகேஷன்களை மிஸ் செய்துள்ளார். மணிகண்டன் முரளியின் இசை ஓகே ரகம்
ஒரு நல்ல எமோஷ்னல் திரில்லர் கதையை கையில் எடுத்து வித்தியாசமான ட்ரீட்மெண்டில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் சுனில்தேவ். முன்பாதியில் படம் நிறைய இடத்தில் சறுக்கினாலும் பின்பாதியில் படம் ஸ்கோரிங் செய்துவிடுகிறது. ஆயினும் நம்பத்தகுந்த நடிப்பும், கரைக்டான மேக்கிங்கும் இல்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்திருந்தால் படம் தப்பித்திருக்கும்
-2.75/5