அயலான்- விமர்சனம்

ஏலியனோடு சேர்ந்து ஹீரோவும் பவர் பெற்றால் அதுதான் அயலான்

சிவகார்த்திகேயன் ஒரு இயற்கை ஆர்வலர். கொடைக்கானல் பூம்பாறையின் வேளாண்மை மகனான அவர் ஒரு கட்டத்தில் வேலைதேடி சென்னை வருகிறார். வேலையும் வருகிறது. கூடவே ஒரு ஏலியனும் வருகிறது. ஏலியன் வருவதற்கான நோக்கம் என்ன? SK&ஏலியன் கூட்டணி வில்லன் டீமின் அபாயத்திட்டத்தை சிதறடித்தார்களா? என்பதே படத்தின் கதை

SK டபுள் OK எனும் படி சிறப்பாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஓப்பனிங் சாங் என அவரின் பில்டப் பயமுறுத்தினாலும் போகப்போக ஒரு நல்ல கேரக்டராக நிலை நிறுத்துகிறார். ரகுல் ப்ரீத்திசிங் கதையோடு ஓரளவு சிங் ஆகிறார். வில்லன் சில இடங்களில் தேவைக்கு அதிகமாக நடித்துள்ளார். இஷாகோபிகர் ஆக்‌ஷன் காட்சிகளில் fire விட வைக்கிறார். யோகிபாபு, கருணாகரன், அனிமேஷன் செய்யப்பட்ட ஏலியன் எல்லாம் பக்கா.

ஏ.ஆர் ரகுமான் பல இடங்களில் எந்திரன் படத்தில் யூஸ் செய்த ட்ராக்கை அப்படியே காபிபேஸ்ட் செய்துள்ளார். இரண்டு பாடல்கள் ஓகே ரகம். ஒளிப்பதிவு நச் என அமைந்துள்ளது. ‘படத்தை ஹாலிவுட் தரத்தில் இருக்கு’ என ரசிகன் சொல்ல வேண்டும் என்பதற்காகவே CG- ல் நிறைய மெனக்கெட்டுள்ளனர். அந்த மெனக்கெடலுக்குப் பாராட்டுக்கள். அது திரையில் நல்ல ரிசல்டை தந்துள்ளது. கேரக்டர்களுக்கான ரைட்டிங்கும் படத்தில் மேக்கிங்கும் தரமாக அமைந்துள்ளது. ஆனாலும் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதே சமயம் படம் போரடிக்கவுமில்லை. குறிப்பாக குட்டீஸோடு நம்பி தியேட்டருக்குச் செல்லலாம்
3/5

Actor SivakarthikeyanAyalaan moviedirector Ravikumar R