காதல் கதை ஒன்றில் லைட்லூப்-ஐ கலந்து கதை சொல்லியிருக்கிறது பனாரஸ்
ஹீரோ ஜையீத்கான் நினைத்ததை முடிக்கும் ஆற்றல் கொண்டவர். நண்பர்கள் தன்னிடம் சவால் விட்டால் அதில் எப்பாடுப்பட்டாவது ஜெயித்துவிடும் வித்தை தெரிந்தவர். படத்தின் ஆரம்பக்காட்சியில் ஹீரோயினிடம் வந்து, “தான் கால இயந்திரத்தை கடந்து வந்துள்ளவன்” என்று கதை அளக்கிறார். ஹீரோயினும் அதை நம்புகிறார். அதன் விளைவு ஒரே ரூமில் இருவரும் ஒரு இரவில் தங்குகிறார்கள். தப்பு எதுவும் செய்யவில்லை என்றாலும் அவரோடு ஒரு செல்பி எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி விடுகிறார் ஹீரோ. அதன் விளைவு பெரிதாகி ஹீரோயினைப் பாதிக்க, அதன் சோகம் ஹீரோவைத் தாக்க, ஊரைவிட்டுச் சென்ற ஹீரோயினிடம் மனிப்புக் கேட்க அவரைத் தேடிச்செல்கிறார் ஹீரோ. ஒரு கட்டத்தில் அவர் விளையாட்டாகச் சொன்ன கால இயந்திரம் அவர் வாழ்வுக்குள் வருகிறது. அதன் விளைவும் முடிவும் என்ன என்பதே கதை
ஹீரோ ஜையீத்கான் முதல்படம் என்ற சுவடு தெரியாமல் நடிக்க முயற்சித்துள்ளார். ஹீரோயின் சோனல் மோண்டோரியோ அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார். மேலும் படத்தில் நடித்துள்ள சின்னச் சின்ன கேரக்டர்கள் எல்லோரும் ஓ.கே ரகம்
படத்தின் முதல் ப்ளஸ் ஒளிப்பதிவு. காசியின் பேரழகை அழகியலோடு படம் பிடித்திருக்கிறது அத்வைதா குருமூர்த்தியின் கேமரா. அடுத்ததாக படத்தின் பாடல்களில் அம்மா செண்டிமெண்ட் பாடல் ஒன்று கதையோடு ஒட்டி வருவதால் மனதில் ஒட்டிக்கொள்கிறது. பின்னணி இசையிலும் ஓரளவு கவனம் ஈர்க்கிறார் இசை அமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத்
காதல் கதையைச் சொல்வதா..டைம்லூப் மேட்டரில் பயணிப்பதா என்ற குழப்பம் படமெங்கும் இருப்பது சின்ன மைனஸ். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் சென்றால் ஓரளவு பனாரஸை ரசிக்கலாம்
2.75/5
#Banaras #பனாரஸ்