Dc- விமர்சனம்

கொலைகாரர்களும் கொலைகளும் கூடிய ஒரு படம்! ஆக லோகேஷின் அறிமுகமே அதகளம் தான்

தலைவாசல் விஜய் சொல்வதை கேட்டு வழிநடக்கும் நபர் லோகேஷ் கனகராஜ். அவரோடு இன்னும் சிலர் உண்டு. ஒரு பாம் ப்ளாஸ்ட் செய்து போலீஸ் வாகனத்தில் இருந்து ஆயுதங்களை கைப்பற்றுகிறார்கள் லோகேஷ் குழுவினர். அதனால் போலீஸ் இவர்களை தேடுகிறது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இரு காதலிலும் விழுகிறார். மரணத்தை மடியில் கட்டிக்கொண்டு வாழும் லோகேஷ் கனகராஜின் வாழ்வும் காதலும் என்னானது என்பது படத்தின் மீதிக்கதை. கதை நடப்பது 2011-ல்!

லோகேஷ் கனகராஜ் ஆக்சனில் தூள் கிளப்பியுள்ளார். கொஞ்சம் எமோஷ்னல் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அவரின் மாடுலேசன் நமக்கு நடிகர் லோகேஷுக்குப் பதில் இயக்குநர் லோகேஷைத் தான் ஞாபகப்படுத்துகிறது. நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர் நாயகிகள் சஞ்சனா ஏ.கே மற்றும் வாமிகா கபி இருவரும். இருவருக்கான ரைட்டிங்கிலும் நல்ல டெப்த். கிரிஷ் தயால், லோகேஷ் டீம் என மற்றும் பலர் நன்றாக நடித்துள்ளனர்.

படத்தின் ஒரிஜினல் ஹீரோ அனிருத் தான் என்பதை நாம் டிக்ளேர் பண்ணலாம். மனிதர் பின்னிபெடலெடுத்துள்ளார். படமெங்கும் ஒலிக்கும் ரிகரிக ரிப்பீட் மோட். ஒளிப்பதிவாளர் முகேஷ் ஜி ஓவர் டைம் போட்டு வொர்க் செய்துள்ளார். அசத்தலான விஷுவல்ஸ்!

படத்தில் எங்கு திரும்பினாலும் வன்முறை தான். ஏ சர்டிபிகேட் என்பதால் ஒகே. ஆனால் திரைக்கதையில் வன்முறைக்கான காரணங்களை அழுத்தமாகச் சொல்லவில்லை. அதனால் ஹீரோ கையிலெடுக்கும் வன்முறைக்கு நாம் ஆமா போடமுடியவில்லை. எமோஷ்னல் கனெக்டிங் என்பதும் படத்திலில்லை. ஜென்ஸி கிட்ஸுக்கான மெட்டிரியலாக படம் வந்துள்ளது
3/5

Actor lokesh kanagarajDC movieDirector Arun Matheswaran