ஜனநாயகன்- விமர்சனம்

“ரீ ரிலீஸ் படத்தில் மட்டுமல்ல..லீக் ஆன படத்தில் கூட ரிக்கார்ட் வைப்பார் தளபதி” இப்படியொரு நம்பிக்கைப் பதிவை விஜய் ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த நம்பிக்கை காப்பாற்றப்பட்டதா?

முன்னாள் காவலதிகாரியான ஹீரோ விஜய் கெளதம் மேனென் மகளான மமிதா பைஜுவை தன் மகள் போல வளர்க்கிறார். மமிதாவை மிலிட்டிரியில் சேர்க்க வேண்டும் என்பது விஜயின் நோக்கம். அதை நிறைவேற்றும் முயற்சியில் விஜய் & கோ இயங்க, அதற்கிடையே இந்தியாவையே சூரையாட ஒரு பெரிய சதியைச் செய்கிறார் வில்லன் பாபி தியோல். நம் ஜனநாயகன் வில்லனின் சதியை எப்படி முறியடித்தார் என்பது படத்தின் கதை

நிஜத்தில் ஜனநாயகனாக மாறிவிட்ட விஜய், படத்தில் தளபதி வெற்றிகொண்டானாக அசத்துகிறார். படத்தில் எல்லா ப்ரேமிலும் அவரது ஆதிக்கம் தான். தளபதி கச்சேரி பாடலுக்கு ஒரு திரைக்கச்சேரி அனுபவம் கன்பார்ம். மமிதா பைஜு கேரக்டர் வார்ப்பும் அவரது நடிப்பும் சிறப்பு. பூஜா ஹெக்டே தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளார். பாபி தியோல் தனது அக்மார்க் நடிப்பைக் கொடுத்தாலும் நமக்கு கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காகவே தெரிகிறது. பிரகாஷ்ராஜை வைத்து ஒரு காட்சியில் கமலை ரோஸ்ட் பண்ணியிருக்கிறார் ஹெச்.வினோத். மேலும் பிரியாமணி, ரேவதி, நரேன் உள்ளிட்ட பலர் படத்திலிருக்கிறார்கள்

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் அனைத்தும் அசத்தல். அனிருத் விஜய்க்காக பெரும்பாடு பட்டுள்ளார். படத்தை ஒரு அணில் போல தாங்கோ தாங்கு என தாங்குகிறார் அனி

இயக்குநர் ஹெச்.வினோத் பகவந்த் கேசரி படத்தை அப்படியே ரிமேக்காமல் சிலபல மாற்றங்களை செய்திருந்தாலும் படத்தில் ப்ளோ மிஸ் ஆகவே செய்கிறது. படத்தின் நீளமும் பெரிய மைனஸ். விஜய் ரசிகர்கள் பயர் விடுவதற்கான மெட்டிரியல் படமெங்கும் இருக்கிறது. அதனால் இது தளபதியன்ஸின் ஜனநாயகன்
2.75/5

Actor VijayJana nayagan movie