கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படமாக மாறிவிடும் அபாயம் உள்ள இந்த நாயுடுவை எப்படி ஹேண்டில் பண்ணியுள்ளனர்?
நாயுடுவாக மாதவன். சிறு வயதிலே மோட்டார்கள் மீதும் அதன் இயக்கவியல் கண்டுபிடிப்புகள் மீதும் பெருங்காதல் கொண்டவராக இருக்கிறார். அவரின் தீராத உழைப்பு மற்றும் தேடல் மூலம் பல உயரங்களை அடைகிறார். 1930 காலகட்டத்தில் மாதவனின் வளர்ச்சி மீது பெரும் பொறாமை ஏற்படுகிறது. அதனால் அவரை நிர்வாக ரீதியாக அட்டாக் செய்கிறார்கள். அதிலிருந்து நாயுடுவான மாதவன் எப்படி மீண்டார்? என்பது தான் படத்தின் கதை
மாதவன் பல காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சில காட்சிகளில் ஓவர் நடிப்பைக் காட்டியுள்ளார். துஷாரா விஜயன் கடைசியில் வரும் சிரிப்புக் காட்சியைத் தவிர மீதமுள்ள எல்லாக் காட்சிகளிலும் அசத்தியுள்ளார். பிரியாமணிக்கு துண்டுரோல் தான். கருணாகரன் ஜெயராம் இருவருமே கவனிக்க வைத்துள்ளனர். ஆச்சர்யப்படுத்தி அதகளம் செய்துள்ளார் சத்யராஜ்
அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவு கனகச்சிதமாக இருந்தது. அந்தக் காலகட்டத்திற்கான கலரிங்-ஐ அபாரமாக செட் செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா கதைக்குத் தேவையான நல்லிசையை வழங்கியுள்ளார். பாடல்கள் கூட ஒகே
கதையாக எடுத்திருப்பது உண்மைச் சம்பவத்தை என்பதால் மிக கவனமாக திரைக்கதை அமைத்துள்ளனர். பெரியாருக்கும் நாயுடுவிற்குமான நட்பை துருத்தாமல் இயல்பாக நுழைத்திருப்பது அழகு. ஆனால் சில ஈயம் பூசின காட்சிகள் மைனஸ்! மேலும் முதல் பாதியில் இருந்த நேர்த்தி இரண்டாம் பாதியில் இல்லை. நாயுடுவின் வரலாற்றை ஓரளவு கமர்சியல் அம்சத்தோடு கொடுத்துள்ளனர். ஒருமுறை பார்க்கலாம்
3/5