போட்- விமர்சனம்

நடுக்கடலில் போட்! அது ரசிகனை கரை சேர்க்கிறதா?

யோகிபாபு தன் தங்கைக்கு திருமணம் நடத்தவேண்டும் என்ற கமிட்மெண்டில் இருக்கிறார். அதற்காக பிரிட்டிஷாரால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தன் தம்பியை விடுவிக்க முயற்சிக்கிறார். யெஸ் கதை நடக்கும் காலம் 1943. ஜப்பான் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருக்கும் நாடுகள் மீது குண்டுமழை பொழியப்போவதாக நிலைமை இருக்கிறது. இச்சூழலில் தான் யோகிபாபு தன் தம்பியை மீட்க முனைகிறார். போர் உருவாகும் சூழல் என்பதால் யோகிபாபு ஒரு போட் மற்றும் சிலருடன் நடுக்கடலுக்குள் செல்ல வேண்டிய நிலை. நடுக்கடலுக்குள் சென்ற யோகி& கோ எப்படி கரை சேர்கிறார்கள் என்பதே திரைக்கதையாக விரிகிறது

கதை தன்னிடம் கேட்கும் உணர்வுகளை திரையில் கச்சிதமாக கொண்டு வந்துவிடுகிறார் யோகிபாபு. அவரின் ஒன்லைனர்கள் பெரிதாக எடுபடவில்லை. எம்.எஸ் பாஸ்கர் தன் பாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். அவர் பேசும் பல வரலாற்றுடன் கூடிய பொலிட்டிகல் பன்ச்கள் சிறப்பு. சின்னி ஜெயந்த், சாம்ஸ் உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர். ஹீரோயின் கெளரி கிஷனுக்கு சொல்லிக்கொள்ளும் அளவில் படத்தில் ஸ்கோப் இல்லை

ஜிப்ரானின் இசை இந்தக் கடலுக்குள் சிக்கியவர்களை காப்பாற்ற தவறியுள்ளது. பாடல்களில் ஒருபாடல் மட்டும் தரம். ஒளிப்பதிவாளர் நிறைய சி.ஜி ஷாட்களையும் தாண்டி கவனிக்க வைக்கிறார்

ஒரு நல்ல ஒன்லைனைப் பிடித்த இயக்குநர் சிம்புதேவன் சிறப்பான பன்-லைன்களை அடுக்கத் தவறியுள்ளார். பிரிட்டிஷ் காலத்திய ஏகாதிபத்தியம், நம்மவர்களிடையே இருந்த தீண்டாமை உள்ளிட்ட நிறைய டீடைல்ஸ் படத்தில் ஷார்ப்பாக வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் அதுவே ஓவர் டோஸ் ஆகி பல பக்க வசனங்களாகி நிரம்புவதால் நமக்கு சற்று சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. நல்ல பயணமாக மாற வேண்டிய இந்தப் போட் பயணம், சின்னப்பயணமாக மாறிவிட்டது.

2.5/5

actor Yogi BabuactressBoat movieDirector simbu deven