சமீபகால தமிழ்சினிமாவில் வேறு எந்த ஹீரோவும் இப்படி தன் பட ப்ரோமோஷன்களில் கலந்து கொண்டதில்லை. அந்தளவிற்கு விக்ரம் தன் கோப்ரா படத்திற்காக பறந்தார், நடந்தார். சரி ரிசல்ட் என்ன?
கே.எஸ் ரவிக்குமாரை படத்தில் நெடுக்கு வைத்துக்கொண்டே அவரது வில்லன் படத்தை பட்டி டிங்கரிங் செய்து ஒரு கதையாக்கியிருக்கிறார் அஜய் ஞானமுத்து. பணத்திற்காக கொலைகள் செய்யும் ஒரு விக்ரம். பழி வாங்கத் துடிக்கும் ஒரு விக்ரம். கொலைகார விக்ரமை ஃபாலோ பண்ணும் இண்டர்ஃபால் டீம். இதற்கிடையே வரும் காதல் எமோஷ்னல் எல்லாம் கலந்த கலவை தான் கோப்ராவின் கதை
படத்தை ஒற்றை ஆளாக தாங்கியிருக்கிறார் விக்ரம். அடிதடி காட்சிகள், எமோஷ்னல் காட்சிகள் என படமெங்கும் விக்ரமிசம். அவரைத் தாண்டி யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. மிருளாளனி, மியா சார்ஜ், பத்மபிரியா கே.எஸ். ரவிகுமார் இவர்களை விட இஃர்பான் பதான் ஓரளவு தேறுகிறார்.
படத்தில் பெரும்பலமாக இருக்க வேண்டிய பின்னணி இசை படத்தை பின்னுக்குத் தள்ளுவது பெருஞ்சோகம். ஆறுதலாக பாடல்கள் நல்லாருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு மட்டும் ஹாலிவுட் தரம். ஒவ்வொரு ப்ரேமிங்கும் மாஸ் மெட்டிரியல்.
மேக்கிங்கிற்காக செய்த செலவை படத்தின் கதை மற்றும் ட்ரீட்மெண்டிற்கு செலவு செய்திருக்கலாம். மிக மேலோட்டமான அணுகுமுறை திரைக்கதையில் பாம்பாக நெளிகிறது. படம் நம்மை வியப்புக்குள்ளும் ஆழ்த்தாமல், நமக்குள்ளும் கலக்காமல் தடுமாறுகிறது. இன்னும் சரி செய்ய வேண்டியவை நிறைய இருப்பதால் கோப்ரா நிறைவைக் கொடுக்க தவறுகிறது
2.5/5
#cobra #கோப்ரா