DD returns – விமர்சனம்

இந்தப்படத்தின் புரொடக்‌ஷனில் நிறைய பிரச்சனைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டது. அத்தனையும் மீறி தில்லாக வெளிவந்திருக்கும் படம் துட்டு பார்க்குமா?

1965-ல் பாண்டிச்சேரியில் தடைசெய்யப்பட்ட ஒரு சூதாட்டத்தை ஒரு குடும்பம் ஆடுகிறது. ஊரே அக்குடும்பத்தை கொல்கிறது. பேய்களாக மாறும் அக்குடும்பம் அடைபட்டு கிடக்க, தமிழ்சினிமாவின் பேய்ப்பட பார்முலா படி ஹீரோ கேங், வில்லன் கேங் பங்களாவிற்குள் என்ட்ரியாகிறது. வேட்டைக்கு காத்திருக்கும் பேய்கள் இவர்களை சூதாட்டத்திற்கு அழைக்க..பேய்களோடு ஆடும் சூதாட்டத்தில் சந்தானம் வென்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை

சந்தானம் பழைய பன்னீர்செல்வமாக மாறி அட்டகாசம் செய்திருக்கிறார். அசால்டாக பேய்களையே அவர் கலாய்க்கும் இடங்கள் அதிரிபுதிரியாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. அவரோடு இணைந்து காமெடியில் பங்கெடுத்துள்ளது பெரும்படை. அவர்களில் மொட்டைராஜேந்திரன், தீனா, தங்கதுரை, மாறன், சேது, பெப்சி விஜயன், உள்ளிட்ட அனைவருமே கலக்கியுள்ளனர். சுரபி ஹீரோயின் மெட்டிரியலுக்குச் சரியாக பொருந்தியுள்ளார். மாசூம் சங்கர், பிரதீப் ராம் உள்ளிட்ட பேய்குடும்பமும் சிறப்பான காஸ்டிங்

தீபக்குமாரின் ஒளிப்பதிவில் பாண்டிச்சேரி கடற்பரப்பு முதல் அனைத்துமே அருமை. சென்னை டி.ஆர் கார்டனில் அமைந்துள்ள கைதி படத்தின் செட்டை அப்படியே பாண்டிச்சேரி பேய்பங்களாவாக மாற்றிய ஆர்ட் டைரக்டர் A.R மோகனின் திறம் பாராட்டத்தக்கது. பின்னணி இசை பாடல்கள் இரண்டும் படத்தின் மூட்-ஐ கலைக்கவில்லை.

நார்மலான கதை . பேய்படங்களுக்கே உரிய அதே பார்மலான திரைக்கதை தான். ஆனால் புதுபுது காட்சிகள் குட்டி குட்டி ஐடியாக்கள் வழியாக திரைக்கதையில் ‘ஆவி’ பறக்கிறது. எல்லாக் கேரக்டர்களுக்கும் ஒவ்வொரு நோக்கம் கொடுத்து, சரியாக மெயின் கதையோடு அவர்களை லிங் பண்ணி க்ளைமாக்ஸுக்கு நகர்த்திய விதத்தில் இயக்குநர் ப்ரேம் ஆனந்த் முதல் படத்திலே சிறப்பாக பேயாட்டம் ஆடியிருக்கிறார். 100% எண்டெர்டெயின்மெயிண்ட் செய்கிறது இந்த DD returns
3.5/5

Actor SanthanamActress SurbhiDDReturns moviedirector premanand