டீசல்- விமர்சனம்

மீனவ மக்களின் வாழ்வில் அரசாங்கம் கொண்டு வந்த குருடாயில் வாங்கும் திட்டம் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதைச் சொல்லும் படம் டீசல்

வடசென்னை கடலோரப்பகுதிகளில் மீனவ மக்களின் வாழ்வை சிதைக்கும் திட்டமான குருடாயில் பைப்லைன் அமைக்கும் திட்டத்தை 1979-ஆம் ஆண்டு அரசு கொண்டு வருகிறது..அந்தத் திட்டத்தின் மூலமே பைப் லைனில் குருடாயில் திருடி பெட்ரோல் டீசல் பிஸ்னெஸ் செய்கிறார் சாய்குமார். அவரின் வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண் 2014-ல் இன்னும் தீவிரமாக அத்தொழிலில் இறங்குகிறார். வினய் மூலமாக அத்தொழிலுக்குச் சிக்கல் வர, முடிவில் ஹீரோ எப்படி வெல்கிறார் என்பதே கதை

ஹரிஷ் கல்யாண் வட சென்னை இளைஞன் வேடத்திற்கு சரியாக பொருந்தவில்லை. அதுல்யா ரவிக்கும் ஹரிஷ் கல்யாணுக்குமான காதல் காட்சிகள் துளியும் ஒட்டவில்லை. அதுல்யா ரவி நடிப்பிலும் ஆழமில்லை. கொடுத்த கேரக்டருக்குச் சரியாக பொருந்தியுள்ளார் வினய். விவேக் பிரச்சன்னா பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். சாய்குமார் கச்சிதமான தேர்வு

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு நல்ல விஷுவலை கொடுத்துள்ளது. திபு வினன் தாமஸ் ஒரு பாடலில் கவனம் ஈர்த்த அளவிற்கு பின்னணி இசையில் கவனம் ஈர்க்கவில்லை. சான் லோகேஷின் எடிட்டிங்கில் நிறைய ஜம் கட்ஸ்

குருடாயில் திருட்டின் மூலம் நடைபெற்ற அரசியலையும், ஈகோவால் ஒருவருக்கொருவன் பழிவாங்கிக் கொண்ட சம்பவங்களையும் பரபர திரைக்கதையாக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் சண்முகம். ஆனால் படத்தில் கோர்கையற்ற காட்சிகள் நம்மை படத்தோடு ஒன்ற விடாமல் செய்துவிடுகிறது. ஸ்ட்ராங்கான கதை கிடைத்தும் திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் சொதப்பியுள்ளனர்

டீசல்- ஊசல்
2.5/5

Actor Harish KalyanDiesel movie