அதே துணி, அதே டெய்லர், அதே சட்டை. இதான் கேம் சேஞ்சர்
மனதில் நீதி நேர்மை என்பதை மட்டும் வைத்துக்கொண்டு கலெக்ட்ராக வருகிறார் ஹீரோ ராம் சரண். மனம் செயல் இரண்டிலும் ஊழலை மட்டுமே பிரதானமாக வைத்திருக்கிறார் வில்லன் எஸ்.ஜே சூர்யா. ஊழல்வாதியான எஸ்.ஜே சூர்யாவின் அப்பா தான் முதல்வர். அமைச்சரின் அட்ராசிட்டியை அம்பலப்படுத்தி தன் கடமையைச் செய்கிறார் ராம் சரண். இது எஸ்.ஜே சூர்யாவிற்கு கடுப்பை கிளப்புகிறது. உடனே ஹீரோ வில்லன் மோதல் அத்தியாயம் ஸ்டார்ட் ஆகிறது. மோதலில் யார் ஜெயித்தார்? என்பதே படத்தின் கதை
நாயகன் ராம் சரண் மிரட்டலாக நடித்துள்ளார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் வெளுத்து வாங்கியுள்ளார். ப்ளாஸ்பேக் போர்ஷனும் சிறப்பாக அவருக்கு அமைந்துள்ளது. ஆனால் பழைமையான காட்சிகள் அவரை சில இடங்களில் டேமேஜ் செய்கிறது. . எஸ்.ஜே சூர்யா கேரக்டரில் பெரிய அழுத்தமில்லை..பலமுறை அடித்துத் துவைத்த கேரக்டர் வடிவம் என்பதால் பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை. ஹீரோயின் கேரக்டர் எந்தத் தாக்கத்தையும் கதையில் ஏற்படுத்தவில்லை
இசையில் பெரிய இரைச்சலைத் தவிர்த்து பெரிதாக ஒன்றுமில்லை. பாடல்களில் ஜருகண்டி மட்டும் ஒகே ரகம். ஒளிப்பதிவில் ஷங்கரின் மாஸ் விஷுவலை ஒளிப்பதிவாளர் கொண்டு வந்திருக்கிறார்.
அரதப்பழசான கதைக்கு அதைவிட பழைய திரைக்கதை அமைத்துள்ளார் ஷங்கர். அதனால் படம் எங்குமே என்கேஜிங்காக இல்லை. ஓவர் சமூகட்ராமா இப்போதுள்ள காலத்திற்கு எடுபடாது என்பதை இனி ஷங்கர் புரிந்துகொண்டு, தன்னை சேஞ்ச் பண்ணிக்கொள்ள இந்தக் கேம் சேஞ்சர் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது
2.25/5