காந்தி கண்ணாடி- விமர்சனம்

Kpy பாலா கதாநாயகனாக அறிமுகமாயுள்ள காந்தி கண்ணாடி கவனம் பெறுமா?

பணத்தை வாங்கிக்கொண்டு பர்த்டே, திருவிழா, கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தித் தரும் வேலை செய்பவர் பாலா. அவரிடம் தங்களின் 60-ஆம் கல்யாணத்தை நடத்தச் சொல்லி வருகிறார் பாலாஜி சக்திவேல். மனைவி அர்ச்சனாவின் ஆசையை நிறைவேற்றி வைக்க பாலாஜி சக்திவேல் பூர்வீக சொத்தை விற்று பணத்தை ரெடி செய்கிறார். அந்த நேரத்தில் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட, கையில் வைத்திருக்கும் பணத்தை பாலாஜி சக்திவேல் மற்றும் பாலா எப்படி மாற்றினார்கள் என்பது படத்தின் மீதிக்கதை

கதாநாயகன் பாலா என்றாலும் கதையின் நாயகன் பாலாஜி சக்திவேல் தான். சிற்சில இடங்களில் அவரின் ஆக்டிங் ஓவராக தெரிந்தாலும் ஓவரால் படத்தை தாங்குவது அவர் தான் அவருக்குத் துணையாக அர்ச்சனாவும் நல்ல நடிப்பால் எமோஷ்னல் விருந்து வைத்துள்ளார். பாலாவிற்கு இது அறிமுகப் படம் என்பதால் அவரது நடிப்பை மன்னிக்கலாம். வரும் காலங்களில் அவர் தன்னைத் தேற்றிக்கொள்வார். நாயகி கொடுத்த வேலையைச் செய்துள்ளார். ஏனைய கேரக்டர்கள் எல்லோரும் ஒகே ரகம்

இசையமைப்பாளர் பின்னணி இசையில் நன்றாக கவனிக்க வைக்கிறார். பாடல்கள் பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை. ஒளிப்பதிவாளர் தனக்கு கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் நல்ல ஒளிப்பதிவை வழங்கியுள்ளார்

ஹீரோவை பணத்தாசைப் பிடித்தவராக காட்டியதில் ஆழமேயில்லை. ஒவ்வொரு கேரக்டருக்கான ரைட்டிங்கில் அழுத்தமில்லாததால் எந்தக் கேரக்டரும் நம்மோடு ஒன்றவே இல்லை. படத்தின் பெரிய பிரச்சனை இதுதான். மற்றபடி டிமாண்டிடேசனை துணிச்சலாக விமர்சித்த வகையில் இயக்குநர் ஷெரிப்-ஐ பாராட்டலாம்

காந்தி கண்ணாடி- மத்திம பார்வை
2.5/5

Actor KPY balagandhikannadi movie