கட்டா குஸ்தி- விமர்சனம்

குடும்பத்தோட சேர்ந்து சிரிக்கிற மாதிரி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு? என்ற ஏக்கம் உள்ளவர்களா நீங்கள்? அவசியம் கட்டா குஸ்திக்கு டிக்கெட் புக் பண்ணுங்க

செட்டே ஆகாத இருவரையும் கணவன் மனைவியாக செட் செய்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பது தான் கட்டா குஸ்தியின் ஒன்லைன். நீளமான முடி உள்ள மனைவி வேண்டும் என்கிறார் விஷ்ணு விஷால். ஐஸ்வர்யா லட்சுமிக்கு முடி Shot ah தான் இருக்கும். அதிர்ந்து பெண் பேசாத பெண் வேண்டும் என்பார் விஷ்ணு விஷால். ஐஸ்வர்யா லட்சுமி ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட். So இப்படி கான்ட்ரஸ்ட் உள்ள ஜோடி ஒன்று சேர்ந்தால் மணவாழ்வு எப்படி இருக்கும்? இதுதான் படத்தின் மீதிக்கதை

தன்னைத் தானே பெரிய ஆள் என நினைத்துக் கொள்ளும் நாயகனாக விஷ்ணு விஷால் முன்பாதியில் கலகலப்பு காட்டுகிறார். பின்பாதியில் செண்டிமெண்ட் காட்சிகளிலும் அசத்தியுள்ளார். ஐஸ்வர்யா லட்சுமிக்கு அவர் கரியரில் இது முக்கியமான படம்.அவரும் சிறப்பாக நடித்துள்ளார். ஆக்சன் காட்சிகளிலும் அவர் காட்டியுள்ள மாஸ் செம்ம! கருணாஸ் கேரக்டரில் பூமர் அங்கிள் வெளிப்படுவது சிறப்பாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. காளிவெங்கட் தன் பங்கிற்கு வெடித்துச் சிரிக்க வைக்கிறார். முனிஷ்காந்த் கேரக்டரும் அவரின் நடிப்பும் படத்திற்கு பெரும் பலம். கிங்ஸ்ட்லி அவர் ஏரியாவை சிறப்பாக பார்த்துக்கொள்கிறார். பின்பாதியில் வரும் வில்லன் பெரிதாக சோபிக்கவில்லை

ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சற்று இரைச்சல் என்றாலும் ஓ.கே தான். ஒளிப்பதிவாளர் தன் பணியைச் செவ்வனே செய்துள்ளார்

முன்பாதியில் காமெடி 100% வொர்க்கவுட் ஆகியுள்ளது. பின்பாதியில் செண்டிமெண்ட் 80% வொர்க்கவுட் ஆகியுள்ளது. படத்தின் க்ரிப் எங்கும் குறையா விட்டாலும் டெம்ப்ளேட் ஸ்டோரி டெல்லிங் சின்னதாக உறுத்துகிறது. ஆனாலும் படத்தின் வேகம் எவற்றையும் யோசிக்கவிட வில்லை.பல இடங்களில் வாய்விட்டு வயிறு வலிக்க சிரிக்க வைத்ததில் இயக்குநர் செல்லா அய்யாவு ஜெயித்துவிட்டார்.

கட்டா குஸ்தி- கல்லா கட்டும்
3.5/5

Actor Vishnu Vishalgatta kushthi