குட்பேட் அக்லி- விமர்சனம்

ரொம்ப நாட்களாக விண்டேஜ் அஜித்-ஐ மிஸ் செய்த ரசிகர்களுக்கு ஒரு இனிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குநர் ஆதிக்.

18 வருடங்கள் சிறையில் இருந்து வெளி வருகிறார் முன்னாள் டான் ஆன அஜித். அவர் வெளிவரும் நேரம் அவரது மகன் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்படுகிறார். அதற்கான பின்னணி என்ன என்பதில் துவங்கி, முழுக்க முழுக்க அஜித்திசமாக முடிகிறது படம்

‘தான் கொட்டாவி விட்டால் கூட அது மாஸ் தான்’ என்பதை உணர்ந்து அஜித் மாஸ் காட்டியிருக்கிறார். நடப்பதும் எதிரிகளை பறக்க விடுவதுமாக இது அஜித் தன் ரசிகர்களுக்கு எடுத்துள்ள பழைய அவதாரம். தியேட்டரில் அஜித் பேன்ஸ் வைப் செய்தபடியே இருக்கிறார்கள். அர்ஜுன் தாஸ் அரைத்தூக்க முகத்தோடு திரிந்தாலும் அசரடிக்கிறார். திரிஷா நன்றாக நடித்தாலும், அவரின் கேரக்டருக்கான ரைட்டிங் டெப்த் ஆக இல்லை. பிரபு, பிரசன்னா, கிங்ஸ்லி ஜாக்கி ஷெராப் என நிறைய நடிகர்கள் அட்டனன்ஸ் போடுகின்றனர்

ஜிவி பிரகாஷ் இசை பெரிய அதிர்வை வழங்கவில்லை என்றாலும், பெரிதாக குறையுமில்லை. ஒளிப்பதிவாளர் தனது பணியைச் செம்மையாகச் செய்துள்ளார். படத்தில் யூஸ் செய்யப்பட்டுள்ள பழைய பாடல்கள் தியேட்டரில் ஒலிக்கையில் ரசிகர்கள் என்சாய் செய்கிறார்கள்

அஜித்தின் மாஸ் வசனங்களுக்காக மெனக்கெட்டதை இயக்குநர் திரைக்கதைக்கும் மெனக்கெட்டிருக்கலாம். முனை மழுங்கிய கத்தியாக திரைக்கதை ஷார்ப்பின்றி நம்மை வதைக்கிறது. ப்ரஷ் ஆன காட்சி என்று படத்தில் எதுவுமே தென்படவில்லை. வெறும் அஜித் ரசிகனுக்காக மட்டுமே செய்யப்பட்ட கலர்புல் அல்வா இந்த குட்பேட் அக்லி
2.75/5

Actor Ajith KumarGood bad ugly movie