Happy raj- விமர்சனம்

படம் ஆடியன்ஸுக்கு ஹேப்பியா..Unhappy ah?

தன் அப்பா மற்ற அப்பாக்களைப் போல கம்பீரமாக இல்லை என குறைபட்டுக் கொள்கிறார் ஜிவி பிரகாஷ். அப்பாவின் தோற்றம் காரணமாகவே தனக்கு காதல் கைகூடாததை எண்ணி விம்முகிறார். “இங்கருக்கப்போய் தானப்பா உனக்கு லவ் செட்டாகல. வெளியூர் போனா உன் அப்பாவைப்பத்தி யாருக்குத் தெரியபோகுது”! என ஏத்திவிடுகிறார் ஜிவியின் நண்பர். உடனே பெங்களூரில் வேலைக்குச்சேரும் ஜிவி ஸ்ரீகெளரி பிரியாவைச் சந்தித்து காதலாகி கசிந்துருகிறார். அந்தக்காதல் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்ததா இல்லையா.. இதில் அப்பாவான ஜார்ஜ் மரியானின் பங்கு என்ன? என்பதே கதை

இப்படத்திலும் ஜிவி முழு ஹீரோவாக பரிணமிக்கவில்லை. நிறைய இடங்களில் செயற்கையான நடிப்பையே தந்துள்ளார். குறிப்பாக கமலை இமிடேட் செய்யும் காட்சிகள்..ம்ஹும்! படத்தை தன் நல்ல நடிப்பால் ஜார்ஜ் மரியான் பல இடங்களில் தூக்கி நிறுத்துகிறார். நாயகி ஸ்ரீகெளரி பிரியா கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்துள்ளார். அப்பாஸ் நீண்டநாடகளுக்குப் பிறகு ஸ்மார்ட் என்ட்ரி கொடுத்துள்ளார். கீதா கைலாசம் ஒகே ரகம்

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ஒகே ரகம். பின்னணி இசை பரவாயில்லை. கிராமத்தில் நடக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவை அசத்தலாக அமைத்துள்ளார் கேமராமேன்

படத்தின் அடிப்படை பிரச்சனையே மிகவும் தவறான ஒன்று. இந்தக்காலத்தில் யாரும் அழகற்ற அப்பாவை நிராகரிப்பதில்லை. மேலும் இந்த ஒரு காரணம் மட்டுமே திரைக்கதைக்குப் போதுமானதாக இல்லை.

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் மட்டும் ஒகே!

2.5/5

actor G. V. Prakash KumarActrees Sri Gouri PriyaDirector Maria Raja ElanchezianHappy raj movie