Hotspot- விமர்சனம்

ஒரு கதைக்குள் நான்கு கதைகள் என்பது தமிழில் புதிதல்ல. ஆனால் நான்கு கதைகளுக்கும் சில புதிர்களை வைத்துள்ளார் இயக்குநர்

ஒரு உதவி இயக்குநர் தன் காதலியின் அப்பாவிடம் ஒரு கதை சொல்கிறார். தயாரிப்பாளரான காதலியின் அப்பா அக்கதையை ஏற்று காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாரா? என்பது மெயின் கதை. ஆனால் அந்த உதவி இயக்குநர் சொல்லும் கதைகள் தான் விஷுவலில் அதிக நேரம் எடுக்கும் கதைகள். ஆக மெயின் கதையாக இந்த நான்கையும் தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்

மாமனாருக்கு பயப்படும் கணவன். அவன் சமையலறைக்குள் புகுந்து அவஸ்தைப் படும் ஒரு கதை Happy married life

Golden life என்ற கதை சற்று ஆர்வத்தை தூண்டும் ஒரு கதை. அம்மு அபிராமி, சாண்டி மாஸ்டர் அசத்தியுள்ளனர்.

தக்காளி சட்னி என்ற கதை ஈராயிரக்குழவிகளை (2K kids) ஈர்க்கும் தன்மையுடையது. சுபாஷ் ஜனனி ஐயர் நடித்துள்ளனர்

Fame game எனும் கதை ஒரு சமூகத்தேவை. ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகள் அபியூஸ் செய்யப்படுவதை பேசியுள்ளது

இப்படியான படங்களுக்கு துள்ளலிசை முக்கியம் அதை உணர்ந்து இசையை உருவாக்கியுள்ளனர். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் நல்லமுறையில் அமைந்துள்ளது

எல்லாமே சின்னச் சின்ன கதைகள் என்றாலும் திரைக்கதையாக நமக்கு முழு திருப்தியை தருகிறது. சில தடுமாற்றங்கள் இருந்தாலும் Hotspot நல்ல முயற்சி
3/5

actor KalaiyarasanActress Ammu AbiramiHot Spot movie