ஜோ- விமர்சனம்

நீண்டநாள்களுக்குப் பிறகு திரையில் ஒரு காதல் கவிதை

ரியோராஜ் கல்லூரியில் ஒரு ஆவ்ரேஜ் ஸ்டூடண்ட். அவர் க்ளாஸில் புதிதாக சேரும் மாளவிகா மனோஜ் மீது ரியோராஜுற்கு காதல் வருகிறது. அந்த காதலை மாளவிகா அக்செப்ட் பண்ண, அதன்பின் சிலபல எமோஷ்னல் இன்னல்கள் வரிசை கட்டுகின்றன. அந்த இன்னல்களை மின்னல் போன்ற காதல் எப்படி தாக்கியது என்பதே படத்தின் கதை

ஒரு கதைக்குள் மூன்றுவிதமான நடிப்பை காட்ட வேண்டிய பொறுப்பு ஹீரோ ரியோராஜுக்கு. தன் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். மாளவிகா மனோஜ், பாவ்யா என இரண்டு ஹீரோயின்கள். முன்பாதியில் ஒருத்தர், பின்பாதியில் ஒருத்தர் என படத்தை பங்குப்போட்டுள்ளனர். இருவரின் நடிப்பும் படத்தை நமக்கு மிக நெருக்கமானதாக மாற்றுகிறது. தன் அனுபவத்தின் வாயிலாக தானொரு மிகச்சிறந்த நடிகர் என்பதை சார்லி மீண்டும் நிறுவியிருக்கிறார். அன்புதாசன் உள்பட ரியோராஜ் நண்பர்களாக வரும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்

சித்துகுமாரின் இசையில் பாடல்கள் இதம். பின்னணி இசை படத்திற்கு பெரும்பலம். எடிட்டர் படத்தை இன்னும் கொஞ்சம் ஷார்ப் பண்ணியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் மலையாள அழகியலையும் தமிழ்நாட்டு வாழ்வியலையும் அழகாக தன் கேமராவிற்குள் கொண்டு வந்துள்ளார்

96, ராஜாராணி ஆகிய ஹிட் பார்முலா படங்களை நினைவூட்டினாலும் நமக்கு திகட்டாத வகையில் திரைக்கதை அமைத்து முதல் படத்திலே ஆச்சர்யப்பட வைத்துள்ளார் இயக்குநர் ஹரிஹரன் ராம். படத்தின் மீது நமக்கு ஆர்வம் குறையாமல் இருக்கும் வகையில் எமோஷ்னல் மிஸ் ஆகாமல் கடைசிவரை கொண்டுபோய் விடுகிறார் இயக்குநர். சில லாஜிக் உறுத்தல்களை மீறி இந்த ஜோ நம்மை காதலில் நனைய வைக்கிறது
3.25/5

Actor Rio rajdirector hariharanramJoe movie