கப்ஜா- விமர்சனம்

கப்ஜா என்பதற்கு கப்சா என்றே வைத்திருக்கலாம். 2.15 மணி நேரம் ஓடும் படத்தை இவ்வளவு செலவு பண்ணி எடுத்திருக்கிறார்கள். சொதப்பலான திரைக்கதைக்கு ஏன் இவ்வளவு செலவு? இதற்கு இருநாள் ஷுட்டிங் செலவை வைத்து இன்னும் திரைக்கதையில் பல சித்துவேலைகளைச் செய்திருக்கலாம்.

அமராபுரம் என்றொரு ஏரியா. அந்த ஏரியா யார் கன்ட்ரோலில் இருக்க வேண்டும்? என்ற போர் பயங்கரமாக நடக்கிறது. இந்தப் போரின் நடுவே உபேந்திரா வருகிறார். அப்புறம் என்ன? அப்படியே அமராபுரம் அவர் கைக்கு வருகிறது. அதன்பின் பல வில்லன்கள் உபேந்திரா வை நோக்கி படையெடுக்கிறார்கள்..அந்தப் படையெடுப்பாளர்களை எல்லாம் வடை சாப்பிடுவது போல ஈசியாக டீல் செய்கிறார் உபேந்திரா. இதில் நமக்கு என்ன கிடைக்கிறது? வேற என்ன வடை தான்

உபேந்திரா கண்கள் சிவக்க, ரத்தம் தெறிக்க,உடல் முறுக்க உழைத்துள்ளார். சண்டைக்காட்சிகளில் அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். நாயகி ஸ்ரேயா எமோஷ்னல் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். வில்லனாக…இல்லை வில்லன்களாக வரும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பின்னணி இசை என்ற பெயரில் இசை அமைப்பாளர் பெரும் இம்சை செய்துள்ளார். பாடல்களும் பெரிதாக இல்லை. சில இடங்களில் எல்லாம் இசை பெரும் இரைச்சல். கேமராமேன் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைக்கு குறை வைக்கவில்லை. சி.ஜி வொர்க் படத்தில் படு வீக்காக அமைந்துள்ளது

அம்மா செண்டிமெண்ட் தன் எதிரிகளை அழித்தொழிக்கும் ஹீரோ, என அப்படியே KGF எபெக்டில் எழுதப்பட்டிருக்கும் கதை திரைக்கதையில் கொஞ்சம் கூட KGF தந்த என்கேஜிங்& எண்டெர்டெய்ன்மெண்ட் இல்லை. வெறும் பில்டப்பாக நகரும் காட்சிகளில் சுவாரஸ்யமே இல்லாததால் கப்ஜா வெறும் கப்சாவாகத் தான் நம் மனதில் பதிகிறது
2/5

Actor Kichcha SudeepaActor Upendradirector R.ChandruKabzaa movie