கடுக்கா- விமர்சனம்

கொங்கு தமிழில் ஒரு காமெடி கலந்த காதல் படம்

கொங்கு மண்டலத்தின் கிராமம் ஒன்றிற்கு படிக்க வருகிறார் நாயகி. ஊரில் சும்மா சுற்றும் நாயகன் விஜய் கெளரிஷ் அவரை காதலிக்கிறார். நாயகியும் காதலிக்கிறார். இங்கு தான் ட்விஸ்ட்! நாயகி விஜய் கெளரிஷ்-ஐ மட்டும் ஹீரோயின் லவ் பண்ணவில்லை. எக்ஸ்ட்ரா இன்னொரு இளைஞனையும் காதலிக்கிறார். அவர் இருவரை காதலிப்பதின் நோக்கம் என்ன என்பதே க்ளைமாக்ஸ்

நாயகன் விஜய் கெளரிஷ் வெகு இயல்பாக நடித்துள்ளார். அவரின் கோவை வட்டார வழக்கும் அவருக்கு உதவியுள்ளது. நாயகி ஸ்மெகா தனக்கு வழங்கப்பட்டுள்ள கேரக்டரை அச்சுப்பிசகாமல் செய்துள்ளார். இணை நாயகன் அடர்ஸ் மதிகாந்தும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். நாயகியின் அப்பா அல்டிமேட் ஆக நடித்துள்ளார். படத்தில் பெரும்பாலான இடங்களில் சிரிப்பு வருவதற்கு அவரே காரணமாக இருக்கிறார்

படத்திற்கு தேவையான பின்னணி இசையை வழங்கி கவனிக்க வைக்கிறார் இசை அமைப்பாளர் கெவின் டி காஸ்ட். பாடல்களும் இன்ட்ரெஸ்டிங். ஒளிப்பதிவாளர் சதிஷ்குமார் கிராமங்களின் இயல்பை அதன் இயல்பு மீறாமல் சிறப்பாக காட்டியுள்ளார்

சின்னதாக ஒரு கதையை எடுத்துக்கொண்டு கலகலப்பான திரைக்கதை மூலம் படத்தை என்கேஜாக வைத்துள்ளார் இயக்குநர் முருகரசு. குறைந்த பட்ஜெட்டில் நிறைவாக ஒரு காமெடி படத்தை கொடுக்க முயன்றுள்ளனர். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்துள்ளது படக்குழு

கடுக்கா- பார்க்கலாம் ஒருக்கா
3/5

Actor vijay gowrishKadukka movie