கிங்டம்- விமர்சனம்

தெலுங்கில் ஒரு ரெட்ரோ

சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற சூர்யாவின் ரெட்ரோ ஸ்டைலில் வெளியாகியுள்ளது விஜய் தேவரகொண்டாவின் கிங்டம். கதை என்ன? கான்ஸ்டபிள் ஆன விஜய் தேவரகொண்டா தன் அண்ணனைத் தேடிச் செல்கிறார். அண்ணனைத் தேடுவது தான் நோக்கம் என்றாலும் உயரதிகாரியின் ஆர்டர் படி அவர் ஒரு அண்டர் கவர் ஆபரேசனும் செய்ய வேண்டும். இதை விஜய் தேவரகொண்டா எப்படிச் செய்து முடிக்கிறார் என்பதே கிங்டம். இந்தக் கதைக்குள் அரசகுல புனைவும் பேசப்பட்டுள்ளது

முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் ஹீரோவாக மாறியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. சண்டைக்காட்சிகளில் நிறைய ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். வாழ்த்துகள். சத்யதேவ் படத்தின் செகண்ட் ஹீரோ போல் வந்து அசத்துகிறார். நாயகி பாக்யஸ்ரீ போர்ஸுக்கு படத்தில் வேலையே இல்லை. ஒருவேளை அடுத்தப் பாகத்தில் இருக்குமோ என்னவோ?

படத்தை முழுவதுமாகத் தாங்கிப்பிடித்துள்ளார் அனிருத். அவரின் பேக்ரவுண்ட் மியூசிக் ஒவ்வொரு காட்சியையும் எ6லிவேட் பண்ணுகிறது. கிரிஷ் கங்காதரன்& ஜோமன் டி.ஜான் இருவரின் ஒளிப்பதிவும் இப்படத்தை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்தியுள்ளது.

கதையாகவும் காட்சியாக்கமாகவும் பெரும் பிரம்மாண்டத்தை தன்னகத்தே கொண்டுள்ளது படம். ஆனால் திரைக்கதை தான் படம் பார்க்கும் நம்மை எங்கெங்கோ அழைத்துச் சென்று சோதிக்கிறது. இவ்வளவு செலவு செய்தவர்கள் திரைக்கதையில் இன்னும் தீவிரமாக& வேலை செய்திருக்கலாம்

கிங்டம்- கஷ்டம்
2.5/5

Actor Vijay DeverakondaKingdom movie