கொலை- விமர்சனம்

கொலையும் அதன் பின்னணியில் உள்ள சம்பவங்களும் தான் கதை

பணியின் மீது விருப்பமின்றி ஓய்வில் இருக்கும் ஒரு சீனியர் இன்வெஸ்டிகேஷன் போலீஸ் ஆபிசிரான விஜய் ஆண்டனியை மாடல் அழகி லைலா கொலை வழக்கில் உதவி செய்ய அழைக்கிறது காக்கி மேலிடம். விஜய் ஆண்டனியின் தயக்கம் துறக்க வைத்து அவரை இந்த விசாரணைக்காக அழைத்து வருகிறார் ரித்திகா சிங். லைலா ஏன் கொலை செய்யப்பட்டார்? யாரால் கொலை செய்ப்பட்டார்? என்ற கேள்விகளுக்கான பதிலே படம்

விஜய் ஆண்டனி தன் அளவு அறிந்து நடித்துள்ளார். அல்லது இயக்குநர் அப்படியான கேரக்டரை கொடுத்துள்ளார். பெரிதும் எதிர்பார்த்த ரித்திகா சிங் கேரக்டரில் போதிய அழுத்தமில்லை. லைலாவாக வரும் மீனாட்சி மட்டும் படம் நெடுக மிகச்சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். ராதிகா, ஜான்விஜய், வில்லன் எல்லாம் ஆவ்ரேஜ் ரகமே

படத்தின் அல்டிமேட் ஸ்டார்ஸ் டெக்னிக்கல் பெர்சன்ஸ் தான். கேமராமேன் சிவகுமார் விசயன் அசத்தியுள்ளார். ஒவ்வொரு ப்ரேமிங்கிலும் அவரது அழகியல் கலந்த உழைப்பு தெரிகிறது. இசை அமைப்பாளர் கிருஷ் தான் என்றாலும் மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் மட்டுமே மனதில் நிற்கிறார். அவர் இசையமைத்த புதியபறவை படத்தின் பாடலான, “பார்த்த ஞாபகம் இல்லையோ?” பாடல் படத்தில் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தப்பாடலின் பின்னணி இசையும் ஆங்காங்கே யூஸ் பண்ணப்பட்டுள்ளது.

இந்தக் கொலை படத்தின் பிரதான பிரச்சினை வில்லன் கேரக்டரின் வடிவமைப்பு தான். படு வீக்-ஆன கேரக்டர் ஸ்கெட்ச் அது. முன்பாதி படம் கொடுத்த தாக்கம் பின்பாதியில் சுத்தமாக இல்லை. குற்றத்திற்கான காரணம் ஸ்ட்ராங்காக இல்லாவிட்டால் குற்றம் கூட நமநமத்துப்போகும். இந்தப்படத்திலும் அப்படியான அயர்ச்சி ஆடியன்ஸுக்கு வந்துவிட்டது. அந்த அயர்ச்சியே கொலை படத்தின் தளர்ச்சி
2.5/5

Actor Vijay AntonyKolai movie