குடும்பஸ்தன்- விமர்சனம்

நடுத்தர வர்க்க நாயகனின் குடும்பப் போராட்டமே குடும்பஸ்தன்

நடுத்தரவர்க்கம் என்றாலே அவர்களுக்கு காலத்திற்கும் சர்வைவல் பிரச்சனைகள் இருக்கும். அதைத்தான் இப்படமும் காட்டியுள்ளது. ஹீரோ மணிகண்டனுக்கு காதல் மனைவி, அம்மா அப்பா வேலை செய்யுமிடத்தில் ஒரு நண்பன், வசதியான மாப்பிள்ளைக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட அக்கா, எப்போதும் தன்னைப் பற்றிப் பெருமைப் பீத்திக்கொள்ளும் அக்காளின் கணவன். இவர்கள் தான் உலகம். இவர்கள் அனைவரும் மணிகண்டன் வாழ்வில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியே வருகிறார்கள். இவர்களுக்காகவும் இவர்களாலும் மணிகண்டனின் வாழ்நிலை மற்றும் சூழ்நிலை எப்படியெல்லாம் அவரைச் சுழன்றடிக்கிறது என்பதே படத்தின் கதை

குடும்ப பாங்கான கதாநாயனாக மணிகண்டன் திரையை முழுதும் ஆக்கிரமித்துக் கொள்கிறார். சின்னச் சின்ன எமோஷ்னல் ரியாக்சனில் கூட பிரில்லியண்டாக நடித்துள்ளார். நாயகி சான்வே மேகனாவிற்கு இப்படம் நல்ல மைலேஜ் கொடுக்கும். அவரது நடிப்பும் அந்தளவிற்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. குரு சோமசுந்தரம் வழக்கம் போல் பின்னியெடுத்துள்ளார்..தன் மீதே கழிவிரக்கம் கொள்ளும் ஒரு காட்சியில் அசத்தியுள்ளார். பாலாஜி சக்திவேல், ஆர்.சுந்தர்ராஜன், குருசோமசுந்தரத்தின் மனைவியாக நடித்துள்ளவர், மணிகண்டனின் நண்பர் என பலரும் ஸ்கிரீனில் ஸ்கோர் செய்கின்றனர்

படத்திற்கு இசை நல்ல வேலையைச் செய்துள்ளது. மாண்டேஜ் பாடல்களும் ஈர்க்கிறது. பின்னணி இசையும் ஈர்க்கிறது. ஒளிப்பதிவாளர் படத்திற்கு தேவையான லைட்டிங்-ஐ செய்து அழகாக விஷுவல் செய்துள்ளார்

சின்னக் கதை என்றாலும் அதை கலகலப்பான திரைக்கதையாக மாற்றி ஒரு மினிமம் கியாரண்டி எண்டெர்டெய்மெண்ட்-ஐ கொடுத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி. இரண்டாம் பாதியை இன்னும் ஷார்ப் ஆக சொல்லியிருக்கலாம். இருப்பினும் க்ளைமாக்ஸ் அதகளமாக அமைந்துள்ளதால் குடும்ஸ்தன் நம்மை ஹேப்பியாக்கி அனுப்பி வைக்கிறான்

குடும்பஸ்தன்- Sure shot
3.25/5

Actor ManikandanActress Saanve Megghanadirector Rajeshwar KaliswamyKudumbasthan movie