கும்கி2- விமர்சனம்

பிரபுசாலமன் மைனா மூலம் ரீ என்ட்ரி ஆகி கும்கி மூலமாக மாஸ் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அதன்பிற்கு சில படங்கள் அவரை லோ கேட்டகிரிக்குள் தள்ளியது. அதனால் கும்கியை மறுபடி கையில் எடுத்துள்ளார். கும்கி 2 கை கொடுக்குமா?

ஹீரோ மதியழகனுக்கு சிறு வயதிலே ஒரு யானையுடன் பெரு நட்பு ஏற்படுகிறது. தன் தாயிடம் கிடைக்காத பாசத்தை யானையிடம் காண்கிறார். ஒரு கட்டத்தில் தாயின் சதி மூலமாக யானை மதியழகனிடம் இருந்து பிரிக்கப்படுகிறது. அதன்பின் மணிகண்டன் யானையைக் கண்டுபிடுத்தாரா.. யானைக்கு நேர்கிற ஒரு ஆபத்திலிருந்து யானையைக் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் கதை

அறிமுக ஹீரோ மதியழகன் ஓரளவு ஸ்கோர் செய்கிறார். நிச்சயமாக இன்னும் முன்னேற்றம் தேவை. அர்ஜுன் தாஸ் வில்லன் ரோலில் நடித்துள்ளார். நல்ல கேரக்டரேசன் அவருக்கு. சிறப்பாகச் செய்துள்ளார். மற்ற நடிகர்களும் ஓரளவு ஒப்பேற்றியுள்ளனர்

சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். கூடுமான வரை நல்ல நல்ல லோகேசன்களை தேர்ந்தெடுத்து ஷுட் செய்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை படத்தை உயிர்ப்போடு வைத்துள்ளது. பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை

படத்தின் முதல் இருபது நிமிடம் அருமையாக இருந்தது. சின்ன வயது ஹீரோவிற்கும் யானைக்குமான பாண்டிங் வேறலெவலில் வொர்க் ஆகியிருந்தது. ஆனால் அதன்பின் படத்தின் திரைக்கதை படு சொதப்பல். யானை அளவிளான லாஜிக் கேள்விகளுக்கு சோளப்பொறி அளவிற்கு கூட படத்தில் பதிலில்லை. அதனால் நம்மிடம் கும்கி சிக்கியதா..கும்கியிடம் நாம் சிக்கினோமா என்றே தெரியவில்லை

கும்கி2- சேதாரம்
2/5

Actor MathiDirector Prabhu Solomonkumki 2 movie