அமீர்கான் படம் என்றால் நிச்சயமாக அது காணத்தக்க ஒன்றாக இருக்கும் என்ற கூற்றை லால்சிங் சத்தா நியாயப்படுத்தியிருக்கிறதா?
லால்சுங் சத்தா மனவளர்ச்சி சற்று குன்றியவராக காணப்படும் ஓர் அபாரமனிதர். அவருக்கு ஒரே ஆறுதல் தேறுதல் எல்லாம் அவரது சிறுவயது தோழியான ரூபா தான். இருவரின் வாழ்க்கையின் விசித்திரம் நிறைந்த பயணம் தான் லால்சிங் சத்தா படத்தின் கதை
அமீர்கானின் ஒவ்வொரு அசைவிலும் அப்படியொரு நேர்த்தி. ஓர் மனவளர்ச்சியற்ற மனிதனாகவும் அபாரமான பேரன்பு நிறைந்தவராகவும் படத்தில் ஈர்க்கிறார். கரீனாவும் மெரீனா அலையாக நெஞ்சில் ஓங்கி அடிக்கிறார். சிறிதுநேரம் வந்தாலும் நாக சைதன்யா கவனம் ஈர்க்கிறார்.
படத்தின் கேமராமேன் ஒரு Feel ,good மூட்-ஐ படத்திற்குள் கடத்துவதற்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். இசை அமைப்பாளர் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர்கொடுத்துள்ளார்.
பாரஸ்ட் கம்ப் என்ற உலகப்புகழ் பெற்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும் அதில் நம்முடைய இந்திய சரித்திர நிகழ்வுகளை கோர்த்த விதம் நேர்த்தியாக இருந்தது. தேசப்பற்று, நட்பு, பேரன்பு என முன்பாதியில் நிறைய புல்லரிப்பு மொமெண்ட்கள் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக பின்பாதியில் படம் ஆங்காங்கே சின்னச் சின்ன சறுக்கல்களை எதிர்கொள்கிறது. படத்தின் முடிவில் ஓவர் எமோஷ்னல் ரசனைக்கு ஆகாது என்பது உறுதியாக..லால்சிங் சத்தா முழுமையாக நமக்குள் இறங்க மறுக்கிறார்
3/5