லப்பர் பந்து- விமர்சனம்

இந்த வாரத்தின் வின்னர் பந்து இது

சின்னக் கதைக்குள் கிரிக்கெட், காதல், ஈகோ, சாதி, பெமினிஷம் என அனைத்தையும் பக்கா கமர்சியலோடு கொடுத்துள்ளார் இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து

தினேஷ், ஹரிஷ்கல்யாண் இருவரும் கிரிக்கெட் தான் உலகம் என வாழும் ஹீரோக்கள். இவர்களில் தினேஷ் மகள் மீது ஹரிஷ் கல்யாணுக்கு காதல் வருகிறது. தினேஷ் ஹரிஷ்கல்யாண் இருவருக்குள்ளும் கிரிக்கெட்டால் பிரச்சனை வருகிறது. அந்தப் பிரச்சினை இருவரையும் தாண்டி சுற்றி இருப்பவர்களை எப்படி பாதிக்கிறது என்பதை திரைக்கதை ஆக்கியுள்ளார் இயக்குநர்

தினேஷ், ஹரிஷ் கல்யாண் இருவரும் சரி விகிதத்தில் நடித்துள்ளனர். தினேஷின் மனைவியாக வரும் சுவாசிகா நடிப்பு எல்லோரையும் விட ஒருபடி அதிகமாக மிஞ்சி நிற்கிறது. நாயகி சஞ்சனா எதார்த்த நடிப்பால் படம் பார்க்கும் நம்மோடு கனெக்ட் ஆகிறார். இதர நடிகர்களில், காளிவெங்கட், டி.எஸ்.கே, பாலசரவணன், ஆதித்யா கதிர், தினேஷின் குடிகார நண்பராக வருபவர் உள்ளிட்ட திரையில் வரும் எல்லா நடிகர்களுமே சிறப்பாக நடித்துள்ளனர்

பின்னணி இசையில் பின்னியெடுத்துள்ள ஜான் ரோல்டன் பாடல்களில் பெரிதாக ஜொலிக்கவில்லை. அந்தக் குறையை தீர்க்கும் விதமாக படத்தில் ஆங்காங்கே ஒலிக்கும், இளையராஜா தேவா பாடல்கள் சுகமளிக்கிறது. ஒளிப்பதிவாளர் தனது சிறப்பை கொடுத்துள்ளார். ஆர்ட் டைரக்டர் வொர்க்கும் பேசப்பட வேண்டிய ஒன்று

ஒரு நல்ல தியேட்டர் அனுபவத்திற்கான படமாக இப்படத்தை செதுக்கியிருக்கிறார் இயக்குநர். நடுநிலையைப் பேசும் வசனங்கள் அனைத்துமே அற்புதம். துளியும் தொய்வில்லாமல் பயணிக்கும் திரைக்கதையால் லப்பர் பந்து சிக்ஸர் பந்தாகிறது
3.5/5

actor dineshActor Harish KalyanLubber Pandhu movie