மாயோன்- விமர்சனம்

தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் பழமை வாய்ந்த பாரம்பரிய கோவில் நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்து பின் கொள்ளையர்களை கண்டுபுடிக்கும் கதையே மாயோன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாயோன்மலை என்ற இடத்தில் பள்ளிகொண்ட கிருஷ்ணர் கோவிலில் இருக்கும் பொக்கிசங்களை கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டப்படுகிறது. அந்தத் திட்டத்தின் பின்னணியில் சிபிராஜ் இருக்கிறார் என்பதாக படம் நகர்கிறது. படத்தின் ப்ளஸ் பாயிண்டாக மாறியிருக்க வேண்டிய சிபிராஜின் நடிப்பு படத்திற்கு மைனஸாக இருக்கிறது. ஒரேவிதமான முகபாவனைகளை காட்டி ரொம்பவே சோதிக்கிறார் சிபி. கே.எஸ் ரவிக்குமார் கேரக்டருக்கு இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம். பகவதி பெருமாள் காமெடி பெரிதாக எடுபடவில்லை. ஹீரோயின் கேரக்டரை ஓரளவு கதைக்குள் புகுத்தியிருக்கிறார்கள். வில்லனாக வரும் ஹரிஸ் பேரிடி நடிப்பு மட்டும் ஸ்டாண்டர்டாக இருக்கிறது. மெயின் வில்லனும் ஒரு சண்டைக்காட்சியில் மிரட்டியிருக்கிறார். ராதாரவி சிறிய ரோல் என்றாலும் தனித்துத் தெரிகிறார்

படத்தின் ப்ளஸ்களில் ஒன்று இளையராஜா இசையில் கோவிலுக்குள் ஒலிக்கும் ஒருபாடல். அடுத்ததாக கேமராமேனின் வேலையும் படத்தை கவனிக்க வைக்கிறது. பின்னணி இசையில் இளையராஜா கதையோடு நம்மைப் பயணிக்க வைக்கிறார். படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சுத்தமாக எடுபடவில்லை

திரைக்கதையின் போக்கு பல இடங்களில் தேக்கம் காண்பதால் படத்தோடு முழுமையாக கனெக்ட் ஆக முடியவில்லை. இன்னும் செறிவாக திரைக்கதை அமைத்திருந்தால் மாயோன் வணங்க வைத்திருப்பார்

2.5 /5

Actor SibisathyarajActress Tanya RavichandranDirector KishoreMaayon movie