மதராஸி- விமர்சனம்

ஸ்லீப்பெர் செல்களை அழித்தால் அது துப்பாக்கி. துப்பாக்கி கலாச்சாரத்தை அழித்தால் அது மதராஸி

காதல் தோல்வியால் துண்டு போய் திரிகிறார் ஹீரோ சிவகார்த்திகேயன். அவர் இனி தான் வாழ்வது வேஸ்ட் என தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். அந்நேரத்தில் வில்லன் டீம் தமிழ்நாட்டிற்குள் துப்பாக்கிகள் சப்ளையை துவங்குகிறது. அதைத் தடுக்க NIA அமைப்பு பிஜுமேனென் தலைமையில் செயல்படுகிறது. இந்த அமைப்பிற்குள் சிவகார்த்திகேயன் வந்து சேருகிறார். தமிழ்நாட்டிற்குள் துப்பாக்கி கல்ச்சரை பரவ விடாமல் SK தடுத்தாரா.. தன் காதலில் ஜெயித்தாரா என்பதே மீதிக்கதை

சின்னதாக மனநிலை பிரச்சனை உள்ளவராக நடித்துள்ள Sk நடிப்பில் நிஜமாகவே அசத்தியுள்ளார். ஆக்சன் காட்சிகளில் எல்லாம் அனல்! ருக்மணி வசந்த் ஆகச் சிறந்த அழகியாக இருக்கிறார். நடிப்பிலும் நல்ல தேர்ச்சி. வில்லன்கள் மிரட்டியுள்ளனர். விக்ராந்த், தலைவாசல் விஜய் உள்பட பலரும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர்

அனிருத் தன் பின்னணி இசையால் பல இடங்களில் மதராஸிக்கு மாஸ் ஏற்றுகிறார். சில இடங்களில் மட்டும் இரைச்சல் அதிகம். பாடல்கள் பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் மிக நேர்த்தியாக தனது பணியைச் செய்துள்ளார். ஒவ்வொரு ப்ரேமிங்கும் மாஸ் மாஸ்
ஸ்ரீகர் பிரசாத் இன்னும் இருபது நிமிட படத்தை வெட்டியிருக்கலாம். சில ரிப்பிடடு சீன்ஸ் போர் அடிக்குது சாரே

வழக்கம் போல படத்தை தனது பரபர திரைக்கதையால் கொண்டு போகிறார் முருகதாஸ். சிலபல லாஜிக் கேள்விகள் இருந்தாலும் ஓரளவு அவற்றைச் சமாளிக்கும் படி காட்சிகளை வைத்து ஒப்பேற்றியுள்ளார். இரண்டாம் பாதியை இன்னும் வளமாக எழுதியிருக்கலாம். சின்னச் சின்ன ஐடியாக்களும் பரபர ஆக்சனுமே படத்தைக் காப்பாற்றுகிறது
2.75/5

Actor SivakarthikeyanMadharaasi movie