மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – விமர்சனம்

RATING 2.5/5

நடித்தவர்கள் – துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, சரண்யா பொன்வண்ணன், ஜே.டி.சக்ரவர்த்தி மற்றும் பலர்

இசை – அச்சு

ஒளிப்பதிவு – பி.ஜி.முத்தையா

இயக்கம் – ராகேஷ்

வகை – கிரைம், திரில்லர்

சென்சார் பரிந்துரை – ‘U/A’

கால அளவு – 1 மணி நேரம் 55 நிமிடங்கள்

லிக்க வலிக்க கிலோ கணக்கில் கழுத்தில் நகைகளை அள்ளிப் போட்டுச் செல்லும் மிடில் கிளாஸ் பெண்களையும், வயதான பெண்களையும் குறி வைத்து பட்டப் பகலில் நகைகளை பறித்துச் செல்லும் கும்பலை ஹீரோ எப்படி ஸ்கெட்ச் போட்டுத் தூக்குகிறார்? என்பதே கதை.

நடிப்பில் ஸ்கோர் செய்ய ஏகப்பட்ட இடங்களில் வாய்ப்பிருந்தும் ஏனோ திக்கித் திணறுகிறார் ஹீரோ துருவா. ஆனால் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அவருடைய வாட்ட சாட்டமான உடலமைப்பு அந்தக் குறையைச் சரி செய்திருக்கிறது.

ஐஸ்வர்யா தத், அஞ்சனா என் இரண்டு கதாநாயகிகள். ‘பிக்பாஸ் 2’ வீட்டுக்குள் நடிப்பில் கலக்கிக் கொண்டிருப்பவரின் முகத்தில் நடிப்பா கிலோ என்ன விலை என்று கேட்கிற ரேஞ்சில் தான் எக்ஸ்பிரஷன்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. அதுவரை சாதாரணப் பெண்ணாக வருபவர் திடீரென்று போலீஸ் ஸ்ட்ரெசில் எண்ட்ரி கொடுப்பது சுத்த போங்கு.

அவருக்கும் சேர்த்து அமைதியும், அழகும் ஒருசேர பாந்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களை சொக்க வைக்கிறார் அஞ்சனா.

படத்தில் தனது அனுபவ நடிப்பால் ஸ்கோர் செய்பவர் சரண்யா பொன்வண்ணன் தான். ஓசியில் வரும் ரியல் எஸ்டேட் வண்டிகளில் ஏறிச் சென்று ஓசிச்சாப்பாடு சாப்பிடுவதும், கோவில் தரிசனம் செய்வதும் என அவர் வருகிற காட்சிகள் விறுவிறுப்பு மட்டுமல்ல, கலகலப்பும் கூட!

செயின் பறிப்புக் கும்பலாக வரும் மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ், வளவன் கூட்டணியினர் படம் பார்ப்பவர்களை ‘அடப்பாவிகளா?’ என்று அதிர வைக்கிறார்கள்.

ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் நகைக்கடை அதிபராக வரும் ராதாரவியின் பின்னணி ‘பகீர்’ என்கிறது. பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவும், அச்சுவின் பின்னணி இசையும் காட்சிகளில் பரபரப்பை கூட்டுகின்றன.

செயின் பறிப்புத் திருடர்களைப் பற்றி இதே போன்று ‘மெட்ரோ’ என்றொரு படம் வந்தது. கிட்டத்தட்ட இதுவும் அதே ரகம் தான் என்றாலும் அதில் பார்க்காத சில காட்சிகளையும், நகைக்கடை அதிபர்களின் வியாபாரத் தந்திரத்தையும் காட்சிப்படுத்திய விதத்தில் நகை மோகத்தில் இருக்கும் பெண்களுக்கு படிப்பினை தரும் படமாக்கித் தந்திருக்கிறார் இயக்குனர் ராகேஷ்.

Aishwarya DuttaAnjanaDhruvaJ. D. ChakravarthyMarainthirunthu Parkum Marmam EnnaMarainthirunthu Parkum Marmam Enna Movie ReviewMarainthirunthu Parkum Marmam Enna ReviewMime GopiMovie ReviewRadha RaviRaheshRamachandran DurairajSaranya Ponvannan
Comments (0)
Add Comment