மார்கழி திங்கள்- விமர்சனம்

பாரதிராஜா ஸ்டைலில் மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள படம்

வினோத் கவிதா இருவரும் பள்ளி பருவ காதலர்கள். கவிதாவை தன் உறவில் ஒருவருக்கு மணம் முடிக்க வேண்டும் என்பது மாமன் ஆன சுசீந்திரனின் நோக்கம். கவிதாவின் தாத்தா பாரதிராஜா காதலர்களுக்கு வேறோர் டெஸ்ட் வைக்கிறார். அந்த டெஸ்டில் காதலர்கள் வென்றார்களா? என்பதே மீதிக்கதை. க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்டும் உண்டு!

நடிகர்களை கவனமாக தேர்ந்தெடுத்துள்ளனர். கிராமத்து முகம் மாறாத ஹீரோ. அலட்டிக்கொள்ளாமல் நடிக்கிறார். கவிதா கேரக்டரில் வரும் ஹீரோயினும் நல்ல தேர்வு. தோழியாக வரும் ஒரு இளைஞியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பாரதிராஜா தன் அனுபவத்தை நடிப்பின் வழியே கடத்தியுள்ளார். சுசீந்திரன் ஒகே ரகம்

இளையராஜா இசையில் பெரிதாக ஒன்றும் நிகழவில்லை. கிராமத்து கதையில் ஒரு முணுமுணுக்கும் பாடலைக் கூட ராஜா வழங்கவில்லை ஏன்? பின்னணி இசையிலும் ஜீவனில்லை. ஒளிப்பதிவாளர் மட்டும் தன்னால் முடிந்த எல்லா எபெக்டையும் போட்டுள்ளார்.

ஒரு துண்டு பேப்பரில் அடங்கி விடக்கூடிய கதை என்பதால் திரைக்கதை ஒரு கட்டத்திற்குப் பிறகு டல்லடிக்க துவங்கிவிடுகிறது. பின் பாதியில் சில இடங்களில் இருக்கும் கணம் முன்பாதியிலும் க்ளைமாக்ஸிலும் அமைந்திருக்கலாம். ஜஸ்ட் மிஸ்
2.5/5

Actor Shyamshelvandirector manoj k bharathiMargazhiThingal movie