மாஸ்க்- விமர்சனம்

வெற்றிமாறன் பிரசண்ட் செய்ய, கவின் ஆண்ட்ரியா நடித்துள்ள மாஸ்க் படம் எப்படி இருக்கு?

மூன்று வினோத கேரக்டர்களான கவின், ஆண்ட்ரியா, பவன் ஆகியோர் வாழ்வில் ஒரு கொள்ளைச் சம்பவம் நிகழ்கிறது. அதன் பின்னணி என்ன என்பதும், முடிவு என்ன என்பதுமே மாஸ்க் படத்தின் அவுட்லைன். இதில் ஆண்ட்ரியா ஏன் நாடு கடந்து வாழ ஆசைப்படுகிறார் என்பதற்கு ஒரு பின் கதை. டிடெக்டிவ் ஆக இருக்கும் கவின் ஏன் பணத்தாசைப் பிடித்தவராக இருக்கிறார் என்பதற்கு ஒரு பின்கதை என இன்னும் சில கிளக்கதைகளும் படத்திலுண்டு

நடிப்பில் நன்றாக மெருகேறி வரும் கவின் இப்படத்திலும் நல்ல நடிப்பைக் கொடுத்து அசத்தியுள்ளார். ஆண்ட்ரியா நாம் எதிர்பார்த்த நல்ல நடிப்பை எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே செய்துள்ளார் ஆண்ட்ரியா. பவன் ஒகே நடிப்பால் ஒகே மார்க் வாங்குகிறார். ஏனைய நடிகர்களில் சுப்பிரமணிய சிவா, கிங்ஸ்ட்லி ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர்

ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவில் ஒரு தனிப்பதிவு ஜொலிக்கிறது. நிறைய நல்ல வண்ணங்களை தன் கேமரா கண்கள் மூலம் படம்பிடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் விட்டுக்கொடுக்காத தன் உழைப்பை மாஸ்க்கில் செலுத்தியுள்ளார். பாடல்கள் ஒகே ரகம். எடிட்டர் ராமர் தனது பணியைச் செவ்வனே செய்துள்ளார்

படத்தில் திரைக்கதையை விட புதுப்புது ஐடியாக்கள் நிறைய தரமாக இருக்கிறது. நெல்சனின் வாய்ஸ் ஓவரும் இன்ட்ரெஸ்டிங். அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்களும் சூப்பர் தான். ஆனால் இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கும் திரைக்கதை படுவீக். அதனால் மாஸ்க் மாஸ் காட்டாமல் போகிறது
But லாஸ் இல்லை என்பது ஒரு ஆறுதல்
2.75/5

Actor Kavinmask movie