மிடில் கிளாஸ்- விமர்சனம்

இந்த வாரத்தில் வெளியாகவுள்ள ஒரு நல்ல குடும்ப சினிமா இந்த மிடில் கிளாஸ்

முனிஷ்காந்த், விஜயலக்‌ஷ்மி தம்பதிக்கு இரு குழைந்தைகள். முனிஷ்காந்த் குறைவான மாதச்சம்பளக்காரர். மனைவி விஜயலக்‌ஷ்மிக்கு பெரியளவில் வாழ வேண்டும் என ஆசை. இச்சூழலில் முனிஷ்காந்த் அப்பாவுக்கு ஒரு சேட் கொடுத்த கடன் பத்திரம் முனிஷ்காந்த் கைகளுக்கு கிடைக்கிறது. அதன்மூலம் ஒரு கோடிக்கான செக் முனிஷ்காந்திற்கு கிடைக்கிறது. முனிஷின் மனைவி கனவு கோட்டை கட்டி முடிக்க, செக்கை தொலைக்கிறார் முனிஷ். அதன்பின் என்ன என்பதே கதை

கதையின் நாயகனாக முனிஷ்காந்த் பிரமாதமாக நடித்துள்ளார். உயிரோட்டமுள்ள கேரக்டர் வாய்த்துள்ளது அவருக்கு. நாயகி விஜயலக்‌ஷ்மி நடிப்பும் சூப்பர். சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட்காக வரும் காளி வெங்கட், ராதாரவி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட அனைவருமே தரம்

சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவில் நல்ல மெச்சூட் தென்படுகிறது. பிரனவ் முனிராஜ் பின்னணி இசை பாடல்கள் இரண்டிலுமே கவனம் ஈர்த்துள்ளார். ஷான் லோகேஷின் எடிட்டிங்கும் சிறப்பு

முன்பாதி முழுவதும் மிடில் கிளாஸ் மக்களின் குடும்ப வாழ்வை ரசிகர்களின் கண்முன் நிறுத்தியுள்ளார் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம். பின்பாதியில் படம் எமோஷ்னல் கியரை எடுத்துள்ளது. அது சிறப்பாக வொர்க்கவுட்டும் ஆகியுள்ளது. நிறைய லாஜிக் கேள்விகள் படத்தில் இருந்தாலும் ஒரு நல்ல Feel Good cinema இந்த மிடில் கிளாஸ்
3.5/5

Actor MunishkanthActress VijayalakshmiDirector kishore muthuramalingammiddle class movie