ஒரு காதல் ததும்பும் படத்தை கமர்சியல் கலந்து தர முயற்சித்துள்ளார் இயக்குநர்
படத்தில் நடிகராகவே வரும் விஷ்ணு விஷாலை கதை சொல்லி ஒகே செய்வதற்குச் செல்கிறார் ஹீரோ ருத்ரா. மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருக்கும் ருத்ரா சொல்லும் கதை விஷ்ணு விஷாலுக்குப் பிடிக்கவில்லை. உடனே ருத்ரா தனது வாழ்விலுள்ள காதல் கதையைச் சொல்கிறார். அந்தக் கதையைக் கேட்டு இம்ரசிவ் ஆன விஷ்ணு விஷால் ருத்ரா காதலைச் சேர்த்து வைக்கும் வரை செல்கிறார். அடுத்து என்ன நடந்தது என்பதே கதை
ஒரு ஹீரோவாக முதல் படத்திலே ஓரளவு தன்னை நிலை நிறுத்த முயற்சித்துள்ளார் ருத்ரா. நாயகிகள் மிதிலா பால்கர், அஞ்சுகுரியன் ஆகியோர் அசத்தியுள்ளனர். விஷ்ணு விஷால், மிஷ்கின், கருணாகரன், கஸ்தூரி, கீதா கைலாசம் ஆகியோரும் படத்திற்கு தங்கள் நடிப்பால் சிறப்பு செய்துள்ளனர்
ஜென் மார்டினின் இசையில் பாடல்கள் யூத் ஜெனரேசனை குறி வைத்துள்ளது. பின்னணி இசை பரவாயில்லை. ஹரிஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு தரமாக அமைந்துள்ளது
திரைக்கதையை இன்னும் செறிவாக எழுதியிருக்கலாம். நிறைய அலுப்பூட்டும் காட்சிகளும் படத்தைக் அபாயக் கட்டத்திற்கு நகர்த்துகிறது. ஓஹோ என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரளவு ஒகே என்று சொல்லும் அளவில் அமைந்துள்ளது ஓஹோ எந்தன் பேபி
2.75/5