இரண்டு வீட்டுக்குள் நடக்கும் கலாட்டா களேபரமே இந்தக் கல்யாணம்
ஹீரோ இளனுக்கு ஒரு லட்சியம். பெருசா ஒன்னுமில்ல. லவ் மேரேஜ் பண்ண வேண்டும் என்பது தான். அதற்காக பாரினிலிருந்து ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் நாயகி சான்வி மேக்னாவைச் சந்திக்கிறார். மோதலில் துவங்கி காதலில் விழுகிறார்கள் இருவரும். அது கல்யாணம் வரை செல்கிறது. அதன்பின் நடக்கும் சங்கடங்களும் சமாதானங்களும் தான் படத்தின் கதை
ஹீரோவாக நிச்சயம் இளன் இன்னும் தேறவேண்டும். நிறைய இடங்களில் செயற்கைத் தனம் வெளிப்படுகிறது. நாயகி சான்வி மேக்னா தாறுமாறாக நடித்துள்ளார். எக்கச்சக்க அழகோடு வலம்வரும் அவர் படத்தின் பாசிட்டிவ் எனர்ஜி. ராதிகா சரத்குமார் தனது இருப்பை பின்பாதியில் பக்காவாக தக்க வைக்கிறார். யோகிபாபு காமெடியும் குணச்சித்திரமும் தரமான ஒன்று. செந்தில், எம்.எஸ் பாஸ்கர், கீதா கைலாசம் ஆகியோரும் ஒகே ரகம்
யுவன் சங்கர் ராஜா தனது பின்னணி இசையால் படத்தை ஆங்காங்கே கரை சேர்க்கிறார். பாடல்கள் பெரிதாக சோபிக்கவில்லை. ஒளிப்பதிவாளர் நல்ல கலரிங்-ஐ கொண்டுவந்துள்ளார். ரெண்டு வீட்டுக்குள்ளே நடக்கும் காட்சிகளை வித்தியாசமான கோணங்கள் மூலம் சுவாரசியப்படுத்தியுள்ளார்.
ரைட்டிங்கில் இளன் பெரிதாக சோதிக்கவில்லை. சேம்டைம் சாதிக்கவுமில்லை. கோ ரைட்டராக ஹரிஸ் பணியாற்றியுள்ளார். முதல்வன் பட ரீ கிரியேட்டட் சீன் தவிர வேறு சீன்ஸ் எதிலும் புதுமையில்லை. திருமணத்திற்குப் பின் பெண் மட்டும் தான் வீடுமாற வேண்டும் என்பதில்லை என்ற கருத்தை சுரத்தே இல்லாமல் சொல்லியுள்ளனர்
டைம் ரொம்ப இருந்தால் ஒருமுறை பார்க்கலாம்
2.5/5