ராஜபுத்திரன்- விமர்சனம்

அரைத்த மாவையே அரைத்து சுடப்பட்ட புளித்த தோசையே இந்த ராஜபுத்திரன்

பிரபு வெற்றி இருவரும் அப்பா மகன். ஒருவருக்கொருவர் பாசத்தை ஹெவியாக புளிந்து தள்ளுகிறார்கள். வெற்றிக்கு நாயகி கிருஷ்ணபிரியாவோடு காதல் வருகிறது. அந்தக் காதலில் ஒரு பிரச்சனை. அந்தப் பிரச்சனையால் பிரபுவிற்கும் வெற்றிக்கும் ஊரில் வட்டிக்கு விடும் கோமல் குமார், லிவிங்ஸ்டன் ஆகியோரிடம் பகை வளர்கிறது.. அந்தப் பகையை தந்தை மகன் இணைந்து வென்றார்களா என்பதே கதை

மெகா சீரியலின் சீரியஸ் ஆக்டர்ஸ் போலவே அனைவரும் படத்தில் நடித்துத் தள்ளியுள்ளனர். பிரபு எக்கச்சக்க உணர்ச்சிகளைக் கொட்டி நடித்துள்ளார். ஆனால் நமக்கு எந்த உணர்வெழுச்சியும் எழவில்லை. வெற்றி நடிப்பில் துளிகூட எனர்ஜி இல்லை. கோமல் குமார் லிவிங்ஸ்டன் ஆகியோர் செயற்கைத் தனத்தின் உச்சமாக இருக்கிறார்கள். ஹீரோயின் கிருஷ்ணபிரியாவின் நடிப்பு மட்டுமே படத்தில் பேராறுதல்

ஆலிவர் டெனி தனது ஒளிப்பதிவு பணியை சிறப்பாகச் செய்துள்ளார். நெளஃபல் ராஜாவின் பின்னணி இசை ஓரளவு பரவாயில்லை ரகம். பாடல்களும் ஒகே. எடிட்டிங்கில் நிறைய வேலை மிச்சமிருக்கிறது போல

இயக்குநர் மகா கந்தன் இப்படத்தை ஹீரோ வில்லன் படமாகவும் இல்லாமல், அப்பா மகன் படமாகவும் இல்லாமல், காதலன் காதலி படமாகவும் இல்லாமல் குழப்பியடித்துள்ளார். மிகவும் மேலோட்டமான காட்சிகள், அமெச்சூரான மேக்கிங் மற்றும் வசனம் ஆகியவற்றால் ராஜ புத்திரன் சோக புத்திரனாக மாறிவிட்டார்
2/5

Actor PrabhuActor vetriRajaputhiran movie