விஜய் ஆண்டனி நடிப்பில் மீண்டும் ஒரு க்ரைம் படம்
முன்னால் பேமஸ் ஜர்னலிஸ்ட் விஜய் ஆண்டனி. மனைவியை இழந்து மகளோடு தனிமையாக வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அவர் திரும்பவும் ஜர்னலிஸ்ட் பணிக்குத் திரும்புகிறார். அவர் பணி செய்யும் பத்திரிகை அலுவலகத்தில் ஒரு கொலை பற்றிய விசாரணையில் அவர் இறங்க, பல மர்ம முடிச்சுகள் விழுகின்றன. அதனைத் தொடர்ந்து பல திருப்பங்களோடு பயணிக்கிறது படம்
விஜய் ஆண்டனி வழக்கமாக எப்படி நடிப்பாரோ அப்படியே நடித்துள்ளார். மகிமா நம்பியார் தரமாக நடித்துள்ளார். அவர் கேரக்டரில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. ரம்யா நம்பீசன் சின்னதாக கவனம் ஈர்க்க, நந்திதா நன்றாக நடித்துள்ளார். நிழல்கள் ரவி உள்ளிட்ட மற்ற கேரக்டர்களும் நடிப்பில் குறை வைக்கவில்லை
பின்னணி இசையே பல இடங்களில் கதை சொல்ல முயற்சித்துள்ளது. ஒரு பாடல் பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவு சிக்கனமாகவே இருக்கிறது. எடிட்டிங்கும் சிக்கனமாக இருந்திருக்கலாம்.
படத்தில் கதையை காட்டுவதற்குப் பதிலாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். 10 ஷாட்டில் காட்ட வேண்டிய விசயத்தை 16 பக்கங்களாக பேசுகிறார் விஜய் ஆண்டனி. முன்பாதி படம் நெடுக வசனம் வசனம் வசனம். இரண்டாம்பாதி கொஞ்சம் வேகமெடுத்தாலும் கிலோ கணக்கான லாஜிக் கேள்விகள் நம்மை படத்தில் இருந்து வெளியே தள்ளுகிறது. சோசியல் மீடியா மூலமாக ஒருவரின் உளவியலைப் படித்து அவரை எப்படி தீங்கான காரியங்களுக்குப் பயன்படுத்தலாம் என போடப்படும் திட்டம் பகீர் என்று இருந்தது. மேலும் சமூக நன்மைகளையும் படம் பேசியுள்ளது. படத்தில் பல சோதனைகள் இருந்தாலும் ஒருசில நல்ல விசயங்கள் இருப்பதால் ரத்தத்தை ஆதரிக்கலாம்
3/5