ரெட்டதல- விமர்சனம்

அருண்விஜய்க்கு ஒரு காலத்தில் தல படம் கை கொடுத்தது! தற்போது ரெட்ட தல கை கொடுத்ததா?

ஆவதும் பெண்ணாலே மனுசன் அழிவதும் பெண்ணாலே என்பார்கள். அதைப் போல் இப்படத்தில் அருண்விஜய் தன் சிறுவயது காதலியான சித்தி இத்னானியின் பணத்தாசையால், இன்னொரு கோடீஸ்வர அருண்விஜயை கொன்று விடுகிறார். ஆனால் அதன்பின் அவருக்கு இறந்த அருண்விஜய் மிச்சம் வைத்துள்ள எல்லாப் பிரச்சனைகளும் வருகின்றன. அவற்றையெல்லாம் தன் காதலியோடு எப்படிச் சமாளித்தார் என்பதே கதை

அருண்விஜய் வழக்கம் போல அசுரத்தனமான உழைப்பைக் கொட்டியுள்ளார். ஆனால் பாவம் வழக்கம் போல அவை திரையில் நல்ல மொமெண்ட்ஸை கிரியேட் செய்யவில்லை..காரணம் அவர் கேரக்டருக்கான ரைட்டிங்கில் இருக்கும் சொதப்பலே! சித்தி இத்னானி கேரக்டரும் ரொம்ப ட்ராமட்டிகலாக எழுதப்பட்டுள்ளதால் அவரது நடிப்பும் ஆர்டிபிஷியலாகவே தெரிகிறது. ஜான் விஜய் கொடுமையின் உச்சம். தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பேரொடி பலரும் படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவே

திஜோடோமி சில காட்சிகளில் ரொம்பச் சூப்பரான ப்ரேமிங் வைத்துள்ளார். பல காட்சிகளில் ரொம்பச் சுமாரான ப்ரேமிங் வைத்துள்ளார். இசை சாம்.சி எஸ் என்பதை விட, இரைச்சல் சாம் சி எஸ் எனலாம் போல

கதையே எதார்த்தத்தில் ஒட்டாத போது திரைக்கதை எப்படி ஒட்டும்..அட்லீஸ்ட் படத்தை ஆக்சன் பேண்டஸி என்றாவதுச் சொல்லியிருக்கலாம். எக்கச்சக்க லாஜிக் மிஸ்டேக்ஸ், ஏகப்பட்ட குழப்ப திரைக்கதை என ரெட்ட தல கோட்டை விட்ட இடங்கள் நிறைய. ஜஸ்ட் டைம்பாஸுக்கு வேண்டுமானால் ட்ரைப் பண்ணலாம். மற்றபடி படம் பெரிதாக வொர்க் ஆகவில்லை
2.5/5

Actor arunvijayRetta thala movie